உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழும் வகை

267

அகத்தூய்மையை ஆக்குவதே யாயினும், இவையன்றி நேரடியாகவே அகத்தூய்மைகள் அல்லது ஆக்கப்பண்புகளை வளர்க்கும் சூழ்நிலை களும் பயிற்சிமுறைகளும் உண்டு. நல்ல சமூகத்தில் சமூகக் குழுவும் நண்பர் தோழர் குழுவும் இத்தகைய சூழல்களை அமைப்பர். நல்ல கல்வி நிலையங்கள் இத்தகைய சூழல்களுக்கான பயிற்சிமுறைகளைத் தந்து தனிமனிதர் அகப்பண்பை உயர்த்தும். நல்ல அரசியல் இவ்விரண்டு சார்பிலுள்ள சூழல்களையும் தக்க சட்டதிட்ட முறைகளால் ஆக்கிப் பேணி வளர்க்கும். ஆனால், இம் மூன்றுக்குமே ம் அடிப்படையான பண்புகளும், சமூகப் பண்புக்குத் தனி மனிதனைப் பேரளவு பயிற்றுவிக்கும் பண்புகளும் வீட்டினகத்தேயுள்ள குடும்பச் சூழல்களே. இக் குடும்பத்தின் க் புறத்தூய்மை, வளர்ச்சிக்குரிய பிற்கால மனிதர்களாகிய குழந்தைகளின் உடல் நலத்தைப் பேணுவது போலவே, அவர்கள் அகப்பண்பு வளர்ச்சிக்கும் பேரளவு காரணமாகின்றன. தாய் தந்தையர் பண்பு குழந்தையின் தொடக்கப் பண்புக்கான வித்தாகிறது. தாய் குழந்தையின் முதல் அறிவுக்கருவூலம், முதல் ஆசிரியர், முதல் தோழி ஆகிறாள். தாய்தந்தையர் கூட்டுறவும், உடன்பிறந்தார் கூட்டுறவும், உறவினர் பழக்க வழக்கங்களுமே குழந்தையின் முதற் சமூகமாகவும், தொடக்கப் பயிற்சிக்குரிய தொரு சிற்றுலகமாகவும் அமைகின்றன. அறிவுடைய தாய்தந்தையர் பிள்ளைகள் சூழ்நிலையில் நல்ல நூல்களை வைத்திருந்தால், நல்லறிவு தூண்டும் படங்களாலும் காட்சிப் பொருள்களாலும் வீட்டைச் செப்பம் செய்திருந்தால், குழந்தையினறிவு அப் பொருள்களையே கொழுகொம்பாகக் கொண்டு எளிதில் படர்ந்து வளரும்.

தாய்தந்தையர், உடன்பிறந்தார், அயலவர் வாழ்க்கை யிலுள்ள அமைதி, அன்புடைமை, ஒத்துழைப்பு ஆகியவை கல்லாமலே பிள்ளைகளின் வாழ்வில் படியும். பிறக்கும்போது மனிதன் தொடக்கக்கால மனிதனைப் போலக் காட்டுமிராண்டிப் பண்புடனேதான் பிறக்கிறான். குருதியுடன் இயற்கையாக அவனுக்குக் கிட்டும் மரபாற்றல் நாகரிகத்தை ஏற்கும் ஆற்றலன்றித் தானாக நாகரிகம் வளர்க்கும் ஆற்றலன்று. பிறர் வாழ்விலும் சூழலிலும் அவன் காண்பவை வளரும் அவனது பச்சை