16
||--
அப்பாத்துரையம் - 42
சமய முதல்வரிடம் கடவுட் பற்றில்லாவிட்டால், நடுவரிடம் கோடா நடுநிலை இல்லாவிட்டால், தண்டலாளர் தீர்ப்பு விலையுடையதாய்விட்டால், உலகில் சமயம் ஏது, நேர்மை ஏது? இவ்விரண்டும் இல்லாவிடின், மன்னர் தெய்வத்தின் கூறு என்பது வீணுரையாம் அன்றோ? கேள்விக்கும் வெவ்வினை யாளரை வீழ்த்துவதற்கும் உரியதாக டெல்ஃவீயிலுள்ள வாள் விளங்குவதன் கருத்து இதுவே.
அடிக்குறிப்புகள்
1. Ben Jonson
2.
ஆரிய இனத்தின் ஒரு கூறினரான கிரேக்கர் நடுநிலக் கடலுலகுக்கு வருமுன்னரே அவ்வுலகின் பண்டைப் பழங்குடியினரின் பழந் தெய்வப்பதிகளுள் ஒன்றாக விளங்கியது டெல்ஃவி என்னும் இடம். இங்குள்ள தெய்வத்தின் பூசகர் கிரேக்கர் காலத்தும் குரு மாராகவே தொடர்ந்து செயலாற்றினர். அக் கோயிலின் வாள் வேள்வியிலும், தலைமைக் குற்றவாளிகள் தண்டனையிலும் ஒருங்கே பயன்பட்டது என்பதே ஈண்டுக் குறிக்கப்படுகிறது.