கட்டுரை முத்தாரம்
19
நமக்கினியது நம் உள்ளம்; ஆனால், அதனுடன் நாம் ஒரு மணிநேர உரையாடலைத் தாங்க முடியாது. இவ்வியத்தகு மனப்பான்மைக்குக் காட்டுல்லஸ் தம் காதலைப் பற்றிக் கூறும் செய்தி, ஒரு நல்ல உவமையாகத்தக்கது.
"ஆராத வெறுப்பு எனக்கு உன்மீது,
தீராத காதலும் உன்மீது.
ஈரிடை வகையிதன் சூது
தேரிலேன், தேருவன் ஈது:
நேருறும் துயரம் என்மீது சாருதல் அன்றி மீளாது.
'விருப்பு மிகுதி யொருபுறம்; வெறுப்பு மிகுதி ஒரு புறம்' என்ற இத்தகைய இருதலைக் காதற் பொறியிற் சிக்கித் தான் மனிதனும் ரங்கத்தக்க நிலையில் தன்னிடம் பற்றுக் கொண்டு, அதேசமயம் தன் தோழமைக்கஞ்சிப் பிறரைத் தேடித் திரிகிறான்.
உண்மை நிலை யாதெனில், தனித்திருந்து தன் வெறுமையில் மகிழவேண்டுமானால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். தற்செருக் குடையவனும் அங்ஙனம் மகிழ முடியாது. புற உலகப் பற்றில் உளத்தைப் பறிகொடுத்து விட்ட ஒருவனும் அங்ஙனம் மகிழ முடியாது. இவ்விருதிறத்தாருமே பெரும்பாலாராதலால், தனிமையில் மகிழத்தக்கவர் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே யாவர். அவர்கள் உலகை ஓரளவு அறிந்திருக்க வேண்டும். அதன் சிறுமையைக் காணும் அளவுக்கு அதனை அறிந்திருக்கவேண்டும். அதே சமயம் அச் சிறுமையை வெறுத்தொதுக்கும் அளவுக்கு அவர்கள் நற்பண்புடையவராகவும் இருக்க வேண்டும். ஒருவன் உள்ளத்தில் கீழ்த்தர அவாக்கள் இடம் பெறுமானால், அவன் காட்டின் தனிமையை நாடக்கூடாது; சந்தைக் கும்பலையே நாடக்கடவன். அத் திருட்டவாக்கள் நம்மை ஏமாற்றலாம்; நம் சட்டைப்பையைக் கத்தரிக்கலாம்; ஆனால், தனிமையில் அவை நம்மைக் கண்டாலல்லது கொள்ளைக்காரர்போலத் துணிந்து கட்டிப்போடவோ கொலை செய்யவோ மாட்டா. இங்ஙனம் தனிமை நாடுவோர் மனிதரிடமிருந்து தப்பிப் பேய்களிடம் சிக்குபவரேயாவர். பெற்றோரைக் கொலை செய்தவர்களை உரோமர்கள் தண்டிக்கும் தண்டனைமுறையையே அவர்கள் நிலை