26
அப்பாத்துரையம் - 42
4
ஆண்டுகள் கூட இறைவனுக்கு ஒருநாள் போன்ற அளவே. இதற்கேற்ப நேரெதிரிடையான வாய்மை ஒன்று உண்டு. அது யாதெனில் பேரவா வுடையவனுக்கு ஒருநாள் ஓராயிர ஆண்டுகளுக்கு ஒப்பாகும் என்பதே. ஏனெனில் தன் எல்லைகடந்த ஒருநாளும் ஓறாயிர ஆண்டும் ஒருவருக்கு ஒரு தன்மை யுடையதே. பேரவாவுடையவன் முயற்சிகளைப் பார்க்க, ஆயிர ஆண்டு வாழ்வுடையவனாகவே அவன் தன்னை எண்ணிக் கொண்டிருக்கிறான் என்று தோன்றும். உண்மையில் அத்தனை நீண்டகாலம் வாழ்ந்ததாக அறியப்படும் ஊழிகால முதல்வர்கள் கூடத் தம் வாழ்வுக்கு அத்தனை பாரிய உணவுப் பொருள்களைச் சேகரித்துச் சேமிக்கவில்லை என்பது தெளிவு. தொள்ளாயிரம் ஆண்டு வாழ்ந்தார் கூட ஒரு சில நாட்களுக்கான உணவே முன்னேற்பாடு செய்தனர். அப்படியானால், உலகின் பழக்க வழக்கப் பண்புகளுள் ஏற்பட்டுள்ள மாறுபாட்டின் போக்குத் தான் என்னே? ஒவ்வொரு தனிமனிதன் வாழ்விலும் இப் போக்கை மக்கள் மேன்மேலும் பார்த்துப் பின்பற்றுவதாகவே காண்கிறோம். வாணாளின் அளவில் பாதி கழிந்தபின்பும் அதற்கான முன்னேற்பாடு கழிந்தபாடில்லை?
இது போன்ற பகுத்தறிவுக்கொவ்வாத எந்தச் செயலை யாவது விலங்குகளிடையே காணமுடியுமா? அறிவுக்கொத்த எந்தச் செயலையாவது உயிரினங்களிடம் நாம் கண்டால் கூட, நாம் ‘பகுத்தறிவு' என்று கூறும் பண்பிலிருந்து அது தோற்றியிருக்க முடியாது என்றும், அது இயற்கை யுணர்ச்சி காரணமாக நிகழ்வது மட்டுமே என்றும் முடிவு கட்டிக் கூறுகிறோம். அப்படியானால், நம்மிடம் உள்ள தவறுகள் வகையிலும் அதே இயற்கை யுணர்ச்சியைக் காட்டிக் குறை கூறுவதுதானே முறை? நம் வாழ்நாட்களை எண்ணும் பழக்கம் நமக்கு இருக்கக் கூடுமானால் (எண்ணுவதாகத் தொழுகையின் போது மட்டும் குறிக்கிறோம்), அவ்வெண்ணிகைக்கு ஏற்றபடி நாம் பிற வாழ்க்கைச் செய்திகளைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.ஆனால் நாம் எண்ணிமுடிக்க முடியாததனாலேயே, முடிவற்றதென எண்ணிவிடுகிறதாகக் கொள்ளலாம். இப்படி யானால் நம் கவலைகள் எல்லையற்றிருப்பதில் வியப்புக்கு டமில்லை என்று கூறலாகும். ஃஓரேஸின் அறிவுரை வ்வகையில் நல்ல பயனுடைய பொன்மொழிகளாய்