உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

II-

அப்பாத்துரையம் - 42

செல்வேன்; அல்லது பெரும்பாலும் ஒரு புத்தகத்தைக் கையில் கொண்டு செல்வேன். மேலும் பள்ளிக்கூடக் கட்டுப்பாடு களைக்கூட நான் மதிக்க முடிவதில்லை. புத்தகமில்லாமலே பொது இலக்கண விதிமுறைகளை மனப்பாடம் பண்ணும்படி ஆசிரியர்கள் என்னிடம் இணக்கமாகச் சொல்லிப் பார்த்தார் கள்; பின் வற்புறுத்தினார்கள். ஆனால், அவர்கள் முயற்சி யொன்றும் என்னிடம் பயனளிக்கவில்லை. இருந்தபோதிலும், நான் என் வழக்கப்படி என் தனிப்பட்ட காட்சியறிவினாலும், வாசிப்பினாலும் அவற்றைப் பயின்றகொள்வது கண்டு, அவர்களும் என்னைத் தனியே விட்டுவிட்டார்கள். அந்நாளில் பெரும்பாலும் நான் கொண்ட கருத்துக்களையே இப்போதும் கொண்டிருக்கிறேன். இது எனக்கு வியப்பாயிருக்கிறது.

நான் பதின்மூன்று ஆண்டினனாயிருக்கும்போது ஒரு 'கலி'ப்பாடல் எழுதினேன். வேறு பல பாடல்களுடன் அது அப்போது அச்சேறியிருந்தது. அதன் தொடக்கம் சிறு பிள்ளைத் தனமானதே. ஆனால், நான் கீழேதரும் பிற்பகுதிபற்றி நான் இன்றுகூட நாணுறத் தேவையில்லை - காலங்கடந்த என் மன ஒருமையை இது காட்டும்.

IX

அழுக்காறு கொள்ளா அளவில் சிறுமையும் இழுக்கா றெய்தா இயல்பிற் பெருமையும் இணைதரு நற்றிரு வேண்டுவன் ஒன்றே! பெருஞ்செயல் இசையினும் அருஞ்செயல் சிறுபுகழ், பெருகிய இசையினும் ஒதுங்குசிற் றமைதி, மறைவிலும் மன்னுரை நாடுவன் நன்றே!

பல்லோர் உரையல; பண்புதேர் நண்பர் சில்லோர் அன்புரை தேடுவன் அன்றே!

X

பகலெலாம் நூல்கள் பயில்வேன், தொழில்அல; அகலிருள் இரவெலாம் அசைவிலாத் துயிலே; நயப்பேன் வாழுதற் கொருசிறு குடிலே