உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. நாடோடிகள் ஜோஸஃவ் அடிசன்

அண்மையில் நான் என் நண்பர் ரோஜர் பெருந் தகையுடன் ஊர்ப்புற வெளியில் உலாவப் போயிருந்தபோது, அருகே நாடோடிக் குழுவரின் கும்பு ஒன்று தாவள மடித்திருப்பதைக் கண்டோம். என் நண்பர் ஊர் அமைதி காவலராதலால், அவர்களைக் கண்டதும் சட்டப்படி அவர்களைச் சிறைப்படுத்தித் தண்டித்தாலென்ன என்று எண்ணினார். ஆனால், இதை முறைப்படி செய்ய அவர் பணியாளும் கணக்கரும் அவருடன் இல்லை. அத்துடன் நினைத்த முதல்வேகம் அடங்கியபின் அவரிடம் அதற்கான துணிவும் மறைந்துவிட்டது. ஊர் நன்மையை நினைத்து இவர்களைப் பகைத்துக்கொண்டால், அமைதி காவலராகிய தம் வீட்டிலேயே ஆடும் கோழியும் திருடுபோகுமே என்று அவருக்கு எண்ண முண்டாயிற்று. இதனால் பொருள் இழப்பும் மனக்கவலையும் மட்டுமின்றி, தன் அமைதி காவலின் மதிப்புக்கே ஊறு நேரலாம் என்ற கருத்தும் மேலிட்டது.

இக் காரணங்களால், அவர் மனத்துணிவு மாறினாலும், அவருடைய மனச்சான்று அவர்களைத் தான் தண்டியாமல் விட்டாலும் கண்டிக்கவாவது செய்யத்தான் வேண்டும் என்று தூண்டிற்று. ஆகவே அவர் என்னிடம் இம்மாதிரி நாடோடி களைப் பற்றிய தம் கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

"இவர்கள் ஊர்மக்களுக்கு எப்போதும் ஏதாவது சிறு

தொல்லை

விளைவியாமலிருப்பதில்லை. எங்காவது வெளியில் ஒரு கந்தை காயப்போட்டிருந்தால் போதும், அது அவர்கள் பையில் போய்ச்சேராமலிராது. ஆடு, கோழி, பன்றி ஏதாவது பண்ணையிலிருந்து தப்பித் திரிந்தால் அதை அவர்கள் மெல்லக் கைப்பற்றிக் கொள்வர். இத் தீமைகளைப் பேசாமல்