58
அப்பாத்துரையம் - 42
விட்டுவிடாது யாராவது அவர்கள் மீது எதாவது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால், அவர்கள் பொருள்களுக்கு மேலும் மேலும் தொல்லை வந்துகொண்டுதானிருக்கும்.
'இதுமட்டுமா? ஆண்டுதோறும் அவர்கள் கிட்டத் தட்ட இந்தப் பருவத்தில்தான் வருவார்கள். அவர்கள் வருகிற சமயம் வேலைக்காரர், வேலைக்காரப் பெண்கள் பெரும் பாலும் வீட்டுக்குள் தரிக்கமாட்டார்கள். இவர்களிடம் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த ஒன்றிரண்டு துட்டுக்களைக் கொடுத்துக் குறிகேட்கத் தொடங்கி விடுவார்கள். எத்தனை தடவை குறி கேட்டாலும் அவர்களுக்கு மனம் நிறைவதில்லை. இளைஞரும் கன்னியரும் தங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைவர் யார்; எப்படி இருப்பார்கள் என்பது பற்றியோ, தங்கள் நெஞ்சினுள் மறைத்து வைத்திருக்கும் காதல் பற்றியோ, இவர்கள் பசப்பி ஏய்ப்பதைக் கேட்கும் ஆர்வமில்லாமலிருப்பதேயில்லை. இவ்வார்வத்திடையே பலரிடம் நேரடியாக வாங்கும் துட்டோடு, வேறுவகையிலும் அவர்களுக்கு வருவாய் ஏற்பட்டு விடும். பலர் வீட்டுக்குப் போனபின்தான் தம் சட்டைப்பை அல்லது முன்தானை முடிச்சு கத்தரிக்கப்பட்டிருப்பதைக் கவனிப் பார்கள்.
""
நண்பரின் விரிவுரையை நான் ஆவலுடன் கேட்டிருந்தேன்; ஏனென்றால், எனக்கு இச் செய்திகள் உண்மையிலேயே புதிதாகத்தான் இருந்தது. இதுகண்ட நண்பர், "உங்களுக்கு வேண்டுமானால், ஒரு துட்டை விட்டெறிந்து இவர்களுள் ஒருத்தியிடம் உங்கள் வருங்காலக் குறியைக் கேட்டுப்பார்ப் போம்," என்று என்னை அத் தாவளத்தின் பக்கம் இட்டுச் சென்றார்.
எங்களைப் பார்த்துப் புன்முறுவலுடன் நின்றிருந்த ஒரு குழுவப் பெண்ணிடம் நண்பர் சொற்படி துட்டோடு சேர்த்து ஒரு கையை நீட்டினேன். அவள் சொன்ன குறியை எனக்கு இங்கே எழுதக்கை நாணமடைகிறது.நான் அதில் நெடுநேரம் ஈடுபடாமல் நண்பர் பக்கமாகத் திரும்பினேன். ஆனால், அதற்குள் ஐந்தாறு பெண்கள் அவரைச் சுற்றிக்கொண்டு ஆளுக்கு ஒரு விரலாகப் பிடித்து அதன் மீதுள்ள வரைகளையும் புள்ளிகளையும் ஆராய்வதைக் கண்டேன். அவர் என்னைப் பார்க்காமலே “நீங்கள்