கட்டுரை முத்தாரம்
59
அத்தனைபேரும் புளுகர்கள். ஒருவராவது என் வாழ்க்கைப்பற்றி எதுவும் கூறப்போவதில்லை ஏன் இந்த வீண் வம்பு," என்று உரத்துக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால், பெண்கள் அவர் கையைப் பலபக்கமும் புரட்டிப் பிசைந்து கூர்ந்து கவனிப்பதை அவர் தடுக்கவில்லை. அதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந் தார். ஒருத்தி, "ஐயா நீர் இன்னும் மணமாகாத காளை யல்லவா?” என்றாள். “அதுதான் எல்லாருக்கும் தெரியுமே, இது சொல்வதில் என்ன திறம்,” என்றார் ரோஜர் பெருந்தகை. இன்னொருத்தி, “உமக்கு ஒரு காதலி யிருக்கிறாள், அவள் காதல் வடமீன்போல மாறாதது. இன்றிரவுகூட நீர் அவளை உம் கனவில் காண்பீர்,” என்றாள் முதல் பெண். அவர் முகம் ஒரே புன்முறுவல் காட்டிற்று. ஆனால் நாக்குப் பசப்பிற்று, 'இது முழுதும் புளுகு' என்று.“அவள் கைம்பெண். செல்வ மிக்கவள். நீர் இதுபோலப் பசப்பித்தான் அவளையும் வசப்படுத்தியிருப்பீர்,” என்று மற்றொருத்தி கூறியபோது எல்லாரும் கொல்லென்று சிரித்தனர். ரோஜரும் உடன் சிரித்தார். அவர் சிரிப்பு அவர்களுக்கு அவர்மீது மேலும் உரிமை தந்தது. முதல்வள் அஃது அறிந்து, "அழகு நங்கைகளை உம் சிரிப்பு இனி நெடுநாள் ஏய்க்காது. விரைவில் நீர் ஒருத்தி வலையில் சிக்குவீர்,” என்றாள். அவர், “ஒருநாளு மில்லை, ஒருநாளுமில்லை," என்று கூறியவண்ணம் அவள் கையில் மறைவாக ஒரு வெள்ளி வைத்தார். மற்றவர்களும் அதேபோல அவர் கையைப் பிடித்துப் பிசைந்து ஆளுக்கு ஒரு வெள்ளி பெற்றபின் எல்லாரும் கலகலவென்ற சிரிப்புடன் கண்ணால் அவருக்கு நன்றி தெரிவித்தனர். நண்பரும் என்னுடன் வந்து சேர்ந்தார்.
நண்பர் முகத்தில் இப்போது ஒரு குறுகுறுப்பு. அவர் நடையிலும் ஒரு விறுவிறுப்பு. நாடோடிகளைப் பற்றி அவர் தொடர்ந்து பேசினாரென்றாலும், பேச்சின் போக்கும், தொனியும் சிறிது மாறிற்று. "இவர்கள் எப்படியோ சில சமயம் வருங்காலத்தைக் குறிப்பாயறிந்து சொல்லி மக்களை நம்பவைத்து விடுகிறார்கள். எத்தனையோ நன்மக்கள் அவர்களைப் படிப்படியாக நம்பத் தொடங்கியுள்ளனர்,” என்றார். இச்சமயம் ஒரு நொண்டிக் கிழவன் தன் தடுமாறும் கையை நீட்டி இரந்தான். இயற்கையிலேயே இரக்க நெஞ்ச