உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் - 42

"இதோ தெரிகின்ற புதர் அடர்ந்த மேடுதான் அவர்கள் கோட்டைவாயில்; நெருஞ்சி படர்ந்து பாம்பும் பல்லியும் பழகும் அந்தப் பாழும் பரப்புத்தான் அவர்கள் அரசியல் மாமன்றம்" என்று கூறுகின்றனர் அத்தகைய உலாவாளர்.“பேரவா அவர்கள் உள்ளத்தின் வலுவைக் கெடுத்தது. மட்டற்ற இன்பம் அவர்கள் நரம்புநாடிகளை நலிவித்தது. அடிமைப்படுத்திய ஆற்றல் அடிமைப்பட்டு அழிந்தது. உழைத்தவருக்கு வறுமையும், உழை யாதவருக்குச் செல்வமும் அளித்த அரசுகள், நாகரிகத்துக்கு உழையாத காட்டு மிராண்டிகளை ருகை நீட்டி அழைத்தன. வீரர்களை அடக்கி வீம்பர்களுக்கு இன்பமளித்த நாகரிகங்கள், வீர மழியாத வீம்பர்களுக்கு இரையாயின." வையே

உலாவாளர் தரும் சிந்தனைகள், படிப்பினைகள்.

"நாகரிக அரசுகள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளை ஏன் அடித்துவிரட்ட முடியவில்லை? அவர்கள் விரட்டவே செய்தார்கள் என்று அறிகிறோம். ஆனால், விரட்ட விரட்டக் காட்டு மிராண்டிகள் விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் தாக்கினர். அழிக்க அழிக்க அவர்கள் மீண்டும் அழிவுப் போருக்குத் துணிந்துவந்தனர். நாகரிகம் அழியும்வரை நாகரிகமற்றவர் போராடினர்! நாகரிகம் அழிந்தது.

“நாகரிக சமூகத்தில் இல்லாதவரை அடிமைப்படுத்த முடியும். இது நாகரிகத்தின் கோளாறு. ஆனால், நாகரிகத் துக்குப் புறம்பேயுள்ள இல்லாதவர் சமூகம் அதற்குப் பழிவாங்காதிராது. நாகரிக சமூகத்தில் வீரரைக் கோழைகள் ஆள முடியும். இது நாகரிகத்தின் உள்ளார்ந்த நலிவு. ஆனால் அத்தகைய சமூகத்தை நாகரிகமற்ற வீரர் என்றும் அழிக்க முடியும். அடிமை வீரரைக் கொண்டு நாகரிகமற்ற, ஆனால் தன்னாண்மையும் முழு விடுதலையுரிமையும் வாழ்க்கைப் புத்தார்வமும் உடைய வீரரை எதிர்த்து நிற்கமுடியாது. இது மட்டுமா? மடியில் கனம் இருப்பவர்க்குத்தான் அச்சம் வேண்டும். நாகரிகம் அந்த அச்சத்தைத் தருகிறது. நாகரிகமற்றவர்க்கு அச்சம் தேவையில்லை. துணிச்சல் எளிது.நாகரிக மக்கள் தற்காப்பில் மட்டுமே நிற்கமுடியும். நாகரிகமற்றவர் தாக்க முனையலாகும். தற்காப்புக்கு ஓயா விழிப்பு வேண்டும். எந்த நேரம் செயல் நேரம் என்பது தெரியவராது. தாக்குதல் செய்பவரோ விரும்பியகாலம்