உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

அப்பாத்துரையம் - 43

ஆதிக்க வேட்டைக்காரரின் வேட்டைக் காடாகவும் ஆக்கியுள்ளது. இதனால், ஆதிக்க வேட்டையாகிய நோய் மேல் நாடுகளிலும் பரவி வருகிறது. கீழ்நாடுகளின் தன்னாண்மைக்கும் விடுதலைக்கும் நல்வாழ்வுக்கும் மேல்நாடுகள் எமன்களாய் அமைந்துள்ளன என்னலாம். உலகில் சரிசம நிலையும் பண்பாடும் வளர்ச்சியுற்று மனித நாகரிகம் மேம்பட வேண்டுமானால், கீழ் நாடுகள் சீர்திருத்தி நன்னிலையுறுதல் இன்றியமையாதது.

ம்

கீழ்நாடுகளின் வாழ்வில் மிகமிகச் சீர்கெட்ட பகுதி அரசியல்தான் என்று கூறவேண்டும். நெடுங்காலமாக இத் துறை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ மேல்நாட்டு வல்லரசு களின் பிடியிலேயேயுள்ள. நேரிடையாக மேல்நாட்டாட்சியின் காலடியிலில்லாத நாடுகளிலும், மேல்நாட்டுப் பொருளிய லாதிக்கமும், பண் பாட்டாதிக்கமும், மொழி அறிவாதிக்கமும் மிகுதியாகவே உள்ளன. இம் மேல் நாட்டாதிக்கம் வருவதற்கு முன்பே, சமூக சமய அரசியல் ஆதிக்கங்கள் பொதுமக்கள் கையிலிருந்து தொலைதூரம் சென்று, கிட்டத்தட்ட அயல் நாட்டவர் போலவே பிரிந்துவாழும் ஒருசில உயர்குடிமக்கள் கையில் அடைபட்டிருந்தன. ஆகவேதான், பொதுமக்கள் தம் நாட்டாட்சியிலேயே அடிமை மனப்பான்மையில் பயிற்று விக்கப்பட்டு, மேனாட்டு ஆட்சியையோ, வேறு அயல் ஆட்சிகளையோ தடையில்லாது ஏற்கும் பக்குவமான மனப்பான்மையில் வைக்கப்பட்டிருந்தனர்.

என்ற

இராமனாண்டாலென்ன, இராவணனாண்டாலென்ன, இராமனுடன் கூடவந்த குரங்காண்டாலென்ன? மனப்பான்மையுடன் மக்கள் இருந்தனர். ஆகவே, 'தம் நாட்டு அயலார்' ஆட்சியிலிருந்து 'பிறநாட்டு அயலார்,' ஆட்சிக்கு நாடு மாறிய மாற்றத்தில் அவர்கள் எத்தகைய வேறுபாடுகளையும் காணவில்லை. இது மட்டுமன்று. பல சமயங்களில் மேனாட்டு ஆதிக்கத்தால் தமக்குச் சில வகைகளில் உரிமைகள் மிகுந்ததைக் கூடக் கண்டனர். மேனாட்டு ஆதிக்கத்தை ஒட்டி மேனாடுகளில் வளர்ந்த அறிவியல் நூல்களின் அறிவும், பயனும் அவர்களை வயப்படுத்தின. மொத்தத்தில் அறிவியலின் பயனை மக்கள் பெறாவிட்டாலும், அதனால் நடுத்தர வகுப்பின் வாழ்க்கைத் தரம் ஓரளவு உயர்ந்தது. எனவே தம் நாட்டு ஆதிக்கக்காரரைவிட