உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(158) ||.

அப்பாத்துரையம் - 43

ஓயும்வரை பொறுத்திருந்து வெற்றிகாண்பவரைத் தீமை எதுவும் செய்யமுடியாது. தீமையைத் தாங்கும் உரமும் எதிர்க்கும் வீரமும் அதன் காரணங்களை அமைந்தறிந்து விலக்கும் திறமும் அவரிடம் வளர்வதே இதற்குரிய விளக்கம் ஆகும். பணிவு பொதுவாக ஒரு வலிமையற்ற பண்பு என்று கொள்ளப்படுகிறது. இயற்கையாற்றல் தெரிந்து ஆற்றும் பணிவு இதற்கு நேர்மாறானது. அது தீமையை எதிர்த்துத் தாக்கும் வலிமை தருகிறது.

ஆற்றல்பண்பு, ஆக்கப்பண்பு, வளர்ச்சிப்பண்பு ஆகிய யாவும் உள்ளிருந்துதான் எழுகின்றன. அதுபோலவே அழிவுப்பண்பும் தளர்ச்சிப் பண்புகளும் அகத்திலிருந்து கிளறும் கிளர்ச்சியன்றி, வேறு எதுவும் அன்று.

வளர்ச்சிப்பண்பில் நம்பிக்கை உடைய உடைய சிலர்கூடப் புறச்சூழல்களால் தாங்கள் தளைபட்டுக் கிடப்பதாகக் கூறுவதுண்டு. இன்னும் விரிவான வாய்ப்புவளங்கள், திருந்திய உடல்நிலை வாய்ப்புக்கள் வேண்டுமென்று சிலர் கூறுவர். வேறு று சிலர் தம் ஊழ் தம் கைகால்களைக் கட்டுப்படுத்திச் செயலைத் தடைசெய்கின்றது என்பர். இத்தகையவர்களுக்கு நாம் கூறும் அறிவுரை ஒன்று உண்டு. அதை அவர்கள் உள்ளத்தில் வடுப்பட அழலிடும் எழுத்துக்களால் பொறித்துக் கொள்ளுதல் வேண்டும்.

"உங்கள் சூழலின், உங்கள் வாய்ப்பு வளங்களில், உடங்கள் உடல்வாய்ப்பு நலங்களில் நீங்கள் அவாவும் முன்னேற்றங்களை நீங்களே முயன்று பெறமுடியா தென்றில்லை. அதற்கு நீங்கள் செய்யவேண்டுவதெல்லாம், உங்கள் அகப் பண்பமைதியை நீங்கள் மாற்றியமைக்க உறுதி கொள்வதே.”

தொடக்கத்தில் இவ் அறிவுரை கவர்ச்சியற்ற அறிவுரை யாகத் தோன்றலாம். நல்ல அறிவுரைகள் எவையுமே பெரும்பாலும் தொடக்கத்தில் இப்படித்தான் தோன்றும். போலி அறிவுரைகளைப் போல் அவை எளிதாகவும், கவர்ச்சிகர மாகவும், பகட்டாகவும் இருக்கமாட்டா. ஆனால் அவற்றின் வழிநிற்க உறுதிகொண்டு, இந்நெறியில் காலூன்றிபடுத்தி, தீமைகளகற்றி, ஆன்மீக ஆற்றல்களையும் உயிர்ப் பண்புகளையும் வளர்த்து உருவாக்கத் தொடங்கினால் - உங்கள் அகவாழ்வு