திருநிறை ஆற்றல்
179
இயற்கை தன்னியல்பாய் இயங்குவது. இயற்கையை இயக்குவது இயற்கையின் உள்ளம். இயற்கையின் இந்த உள்ளத்தின் கூறுகளே உயிர்கள். அவை இயற்கையை இயக்கும் பேருயிரின் பகுதிகள். இயங்கா இயற்கையாகிய புற இயற்கையின் உடலினுள்ளிருந்து இயக்கும் பேருயிராகிய இறைவனின் கூறாக நின்று, அவை இயற்கையை இயக்குகின்றன.
மனிதன் பேருயிருடன் அணுக்கத் தொடர்புடைய அறிவுயிர். அவன் இயற்கையால் இயக்கப்படும் நிலையில் இருத்தல் கூடாது. அந்நிலையே சோம்பல் அல்லது செயல் திறமற்றதுயில். இந்நிலையில் இருப்பவையே கீழின மாக்களும் விலங்கினங்களும். மனிதன் சோம்பல் அல்லது திறமற்ற துயில்நிலையை உடையவன் அல்லன். செயல் நிலையை வளர்க்கும் நிலையுடையவன். அவன் கொள்ளும் துயிலும், ஓய்வும், மோன நிலைகளும் ஆகும். இவற்றின்மூலம் அவன் தன் வளர்ச்சியை இயற்கையோடமைந்த அமைதி நிலை அல்லது ஒழுங்குடையதாக்கிக் கொள்கிறான். இறுதித் துயிலாகிய இயற்கைநிலை எய்தும்போதுகூட, அவன் தன் அறிவுள்ளத்தின் படிவமாக ஒன்று அல்லது பலவான உயிர் மரபுகளைப் படிவித்தே செல்கிறான். மனிதனின் பரந்த, தலைமுறை தலைமுறை தொடர்ந்த, உயிர்மரபும் இனமரபும் இயற்கையுள்ளமாகிய பேருயிரை நோக்கி வளர்கின்றன. முழுநிறை வளர்ச்சியை அடைந்த தனிமனிதன் எல்லையற்ற பேருயிரின் ஒரு கட்டற்ற சிறியபடிவம் ஆகிறான்.அவனை அப்பேருயிரிலிருந்து பிரிப்பது அவன் எல்லை ஒன்று மட்டுமே. ஆனால் பேருயிரில் அந்த எல்லை அவனைப் பேருயிரின் ஒரு சரிசம உறுப்பு அல்லது கூறு ஆக்குகிறது. அவன் பேருயிரின் ஒரு பகுதியாகிறான்.
பொன்னுலக முகடேறப் போதுதீயோ நீ, போலி உலகு அளவற்றினை அவாவுதியோ நீ? மின்னுகனவார் அழகை மேவுவையோ நீ, மீளாத அவலநிலை பாவுவையோ நீ?
வானகமும் உன் எண்ண வடிவழகுதான், மறுகுநரகு உன் கருத்தின் சீர்குலைவுதான்! மேனிமிர்ந்த அகநோக்கல்லால் பேரின்பம், வேறில்லை இழிநோக்கே துன்பமாகும்!
1
2