உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

183

ஆற்றல் பெரிது என்ற பழைய நம்பிக்கை அறிவாக மாறவில்லை. அறிவு வளர்ந்தது. ஆனால் பழைய நம்பிக்கை போய்விட்டது. பழைய நல்லநம்பிக்கை இல்லாமல், வேறு வகையான நம்பிக்கை யுடனேயே, அறிவு வளரத் தலைப்பட்டது அவ்வளவுதான்.

அறிவு வேறு, உணர்வு வேறு. குழந்தைப்பருவ உணர்வு அறிவாயிற்று. அது நன்றே ஆனால் குழந்தைப் பருவ நல்லுணர்வு நல்லறிவாகவில்லை. குழந்தைப் பருவத்தின் தூய்மை, ஆர்வ அவாக்கள் குறைந்துவிட்டன. மக்கள் அறிவுப் பண்புடன் இக்குழந்தை உணர்ச்சிகளும் வளர்ந்தால், அவற்றின் கூட்டு நிறைமனிதப் பண்பு ஆகும். அப்பண்பாளரே கனவாளர்கள்; அவர்கள், குழந்தை உணர்வுக் கண்ணால் காணும் உலகை, தம் அறிவுக் கண்ணால் கண்டு, உணர்வற்ற வெள்ளறிவுக் காட்சியாளர்களுக்கு வழி காட்டுகின்றனர்.

அறிவைவிட உணர்வு எந்த வகையில் மேம்பட்டது என்று பலர் கேட்கக் கூடும். உணர்வு என்பது உணர்ச்சியல்ல என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். உணர்ச்சிமீது அறிவு படிந்தவடிவமே உணர்வு. அறிவு தீமையகற்றமட்டுமே உதவும். உணர்வு நன்மையாக்க உதவும். உணர்ச்சிவசப்படும் தன்னடக்க மற்றவன் போக்கை அறிவு திருத்துகிறது. ஆனால் அறிவுக்கு அப்பாற்பட்ட அல்லது அறிவால் தழுவப்பட்ட உணர்வு அறிவையே நல்வழிப்படுத்தத் தக்கது. அவ்வுணர்வே உடல் நலத்தையும் உளநலத்தையும் உண்டு பண்ணுவது. அவ் வுணர்வே ஒருவனை நல்லவன், அஃதாவது சமூகத்தை வளர்ப்பவனாக்குகிறது.

மனிதன் இயற்கையில் உணர்ச்சி வசப்பட்டவன் மட்டுமல்ல. உணர்வு வசப்பட்டவன். வனதெய்வக் கதையில் குழந்தைகள் இவ்வளவு ஈடுபடுவதற்குக் குழந்தைகளின் இயற்கை யுணர்வே காரணம்.வளர்ந்த மனிதரிலும் இவ்வுணர் வுடையோர் உண்டு. அவர்களையே பொதுப்படியாக நாம் நல்லார் என்றும், சிறப்புப்படியாகக் கனவாளர் என்றும் கூறுகிறோம். அவர்கள் மீயுயர் நலம் அல்லது தெய்வீகப் பண்புகளை ஒவ்வொருநாளும் தம் உள்ளத்தில் தோய வைத்து, அவ்வுள்ளப்பண்பை உகப் பண்பாக்க முயலுகின்றனர். அப்பண்பே அவர்களுக்கு உண்மை யான உடல்நலம், உளநலம், உண்மையான செல்வம் ஆகியவற்றைத் தருகின்றன. அறிவு நல்லதுதான் ஆனால்