உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(184) ||.

அப்பாத்துரையம் - 43

இப்பண்புடன் அது ஒப்பிடத் தகுந்ததல்ல அது இப்பண்பு செயலாற்றுவதற்குரிய ஒரு கருவி மட்டுமே. அறிவுடையார், நல்லார் ஆகிய இருதிறத்தாருள் அறிவு இல்லாத இடத்திலும் கூட நல்லாரே சிறந்தவர். ஆனால் நல்லார் அறிவுடை யாரானால் இன்னும் சிறப்புடையவர். அவர்கள் சிறப்பு இன்னும் அரிது. இத்தகைய அருஞ்சிறப்பாளரையே நாம் கனவாளர் என்கிறோம்.

நல்லார் என்ற சொல் பொதுவாக சமூக ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்டவர்களைக் குறிக்கவே வழங்கப்படுகிறது. அதிலும் அவ்வொழுக்கத்துக்கு மாறாக நடக்காதவர்களை அஃதாவது தீமை செய்யாதவர்களை மட்டுமே அது அடிக்கடி குறிக்கிறது.

னால் உண்மையாக நல்லவர்கள் என்பவர்கள் தீமை செய்யாதவர்கள் மட்டுமல்ல. அவர்கள் தீமை செய்யாத துடன் கூடியமட்டும் நன்மையே செய்பவர்கள்; நன்மை செய்வதற்காகவே வாழ்பவர்கள்; அதற்கென்றே அறிவும் ஆற்றலும் நாடுபவர்கள். அதுமட்டுமன்று. அவர்கள் சமூக ஒழுக்கத்தினைப் பின்பற்றுபவர்களல்ல. அவர்களே சமூக ஒழுக்கத்தை ஆக்குபவர்கள்; பேணுபவர்கள்; வளர்ப்பவர்கள். அவர்கள் வளர்த்த சமூகமே, அச்செயலைக்கண்டு விரும்பிய பின், அவர்களைப் பின்பற்றுகிறது. அவர்கள் ஒழுகிக் காட்டிய ஒழுகலாறு சமூக ஒழுக்கத்தின் மேல்வரிச் சட்டம் அல்லது அடிப்படைக் குறிக்கோள் ஆகிறது.

நல்லார் என்பவர்கள் தூய கருத்துடையவர்கள்; உயர்ந்த அவா ஆர்வங்களுடையவர்கள்; தன்னலங் கடந்த பொதுநல ஆர்வமுடையவர்கள்; புகழார்வம்கூட இல்லாது சமூகத் தொண்டார்வம் உடையவர்கள். அவர்களிடம் வாழ்க்கைத் திட்டமும் அதைச் சமூகக் கண்பார்வையில் காட்டும் ஆற்றலும், அதை நோக்கி வழிகாட்டி ஈர்த்துச் செல்லும் திறனும் இருந்தால், அப்போதுதான் அவர்களைக் கணவாளர் என்று சிறப்பிக்கிறோம். இத்தகையோர் தங்கள் வாழ்வைச் சுற்றி ஒரு உளப்பண் பொளியை வீசிக் கொண்டே இருக்கின்றனர். அது இனிமை பயக்கும் ஒருபண்பு வளி மண்டலமாக, ஆற்றல் தரும் ஒரு மின் ஓட்டமாக இயங்குகிறது.