உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

அப்பாத்துரையம் - 43

அழகு பேணக் கடவர்; தூய்மை பேணக்கடவர்; பிறர் மதிப்பதற்கேற்ற தன்மதிப்புப் பேணக்கடவர்; கயவர் தன்மையறிந்து விலகுதற்கேற்ற அறிவு பெறக்கடவர். தீமை பெருக்கி நன்மை பெருக்குதற்கேற்ற அன்பு பாராட்டக்கடவர். சமநிலையும், கூட்டுறவும் பேணும் கலைப் பண்பு வளர்க்கக்கடவர்.

காதல் வாய்ப்புப் பெறாதவர்கூட, காதலின் நோக்கங் களறிந்து தம் அடிப்படைக் குறைபாட்டை நீக்கக்கூடா தென்றில்லை. காதலில் சற்றுக் குறைப்பட்ட உணர்ச்சியே நட்பு. வாழ்க்கைத் துணையாகத் தமக்கு வாய்த்தவர் காதலரல்லாத இடத்தில், அவரை நண்பராக்குதல் கூடாததன்று காதல் தங்கம் போன்றதானால், நட்பு வெள்ளி போன்றதென்பதில் ஐயமில்லை. தியாகத் தீயில் புடமிட்ட நட்பு பலசமயம் காதலை கடந்து, ஒளி வீச வல்லது. மற்றும் தம் காதலுக்குரியவரான வாழ்க்கைத் துணைவருக்குக் காட்டப்படும் தியாகத்தைவிட நட்புக்குரியவரான ஒருவருக்குக் காட்டப்படும் தியாகம், தன்னையும் உயர்த்திப் பிறரையும் உயர்த்தி, பல சமயம் காதலர் வாழ்விலும் அரிதான உயர்பீடு தரமுடியாதென்றில்லை. காதலைத் துறந்தும் காதலில்லாமலும் பீடுற்ற பலர் வாழ்வுகூடப்பாலைவன நீரூற்றுப் போலச் சிறத்தல் இதனாலேயே ஆகும்.

குடும்பச் சூழலும், சமூகச் சூழலும் பலவழியில் காதல் திறமற்றக் கேடுறுமிடத்தில், காதலின் இயற்கைத்திறம் குடும்ப நிலை கடந்து, சமூகநிலை பெற்று, மக்கள் தொண்டார்வமாகவும், நாட்டார்வமாகவும், அறிவார்வமாகவும், கலையார்வமாகவும், கடவுட்பற்றாகவும் மாறுவதுண்டு. நீர் கெட்டியாகிப் பனியாகவும், பனிப்பறையாகவும், ஆவி வடிவாகி நீராவியாகவும் மாறி, தோற்றமும் பண்பும் வேறுபட்டாலும், அப்பொருளின் உள்ளார்ந்த தன்மை மாறாததுபோல, பல சமயம் நீரால் ஆற்றமுடியாச் செயல்களையும் அவை ஆற்றுவதுபோல, காதல் உருமாறி இப்பண்புகளானபோது, தோற்றமும் பண்பு மாறினும், அதன் இயல்புப் பண்பாகிய அன்புத்திறம் மாறாது, பல சமயம் இயலுருவினும் மேம்பட்ட பெரும் பயனையும் அளிக்க வல்லதேயாகும்.

காதல் வாழ்வின் கவர்ச்சியுட்பட்ட இளைஞரும், நங்கையரும் அது தற்காலிக உணர்ச்சியன்று, வாழ்க்கை மலரின்