உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அப்பாத்துரையம் - 43

காடுத்து வாத்தையும்; வாத்தைக் கொடுத்து கோழியையும் இறுதியில் கோழியைக் கொடுத்து ஒரு கணப்புக் கரி மூட்டையையும் பெற்றான். இதற்குள் அவன் சந்தையையும் அணுகிவிடவே, "வந்ததே வந்தோம்," சந்தையைத்தான் பார்த்துவிட்டுச் செல்வோமே, என்று கருதி எங்கும் சுற்றுப் பார்த்தான், இறுதியில் அவன் களைப்புடன் சந்தை விடுதியில் சென்று மூட்டையைக் கணப்படுப்பருகில் வைத்துவிட்டுத் தன்னிடமிருந்த ஒரு செப்புப்பணத்தைக் கொடுத்துச் சிற்றுணா அருந்தினான். அவன் அருந்தி முடிப்பதற்குள் அருந்தகத்தார் ஒருபுறம் தீப்புகை கம்முவதைக் கண்டு கலகலத்தனர். அது வேறு எதுவுமில்லை. நம் நாட்டுபுறக் கிழவன் கணப்படு பருகில் வைத்திருந்த கரி மூட்டையே. மற்றவர் கண்டு அவிப்பதற்குள் கரி முற்றிலும் எரிந்து, சாம்பலாயிற்று.

குதிரை கரிமூட்டையாகும் வரை கவலைப்படாத நம் கிழவன் இப்போதும் அவ்வளவாகக் கவலைகொண்டு விடவில்லை. இனி வீடு செல்லும்போது சுமை எதுவுமில்லாமல் செல்லலாம் என்ற மகிழ்ச்சி மட்டுமே கொண்டான். ஆனால், அவனுடனிருந்த சில வெள்ளையாடை நண்பர்கள் அவன் நாட்டுப்புற மடமை பற்றிக் கேலி செய்தனர். சூதுவாதற்ற கிழவன் அவர்களிடம் அக் கரிமூட்டை பற்றித் தனக்கு அக்கரையில்லை யென்றும், அஃது ஒரு கோழியைக் கொடுத்துத்தான் எவ்வளவோ தந்திரமாகப் பெற்றதே யென்றும் கூறினான். அதைகேட்டு அவர்கள் பின்னும் நதைத்தனர். அவர்கள் பெருகப் பெருக அவனும், கோழி பன்றிக்கும், பன்றி ஆட்டுக்கும் என இப்படிக் குதிரைவரை தான் திறம்பட ஆற்றிய பண்டமாற்றுக்கள் பற்றி எக்களிப்புடன் கதையளந்து தீர்த்தான்.

வெள்ளாடை நண்பர் வேறு வேலையற்றவரும், நகரின் இன்ப வாழ்வுச் செல்வருமாதலால், கிழவனைத் தொடர்ந்து ன்னும் இன்பப் பொழுது போக்குப் பெற எண்ணினர். அவர்கள் “அன்பரே! நீர் இப்போது எல்லாம் கவலையற்றுப் பேசலாம், வீட்டிற்குச் சென்றால், உம் மனைவியிடம் நீர் நல்ல கழற்றுமானம் வாங்குவீர்," என்றனர். கிழவன் அப்போதும் தளராமல், “என் மனைவி என் திறத்தைக் கண்டு என்னை உச்சிமேற்கொண்டு மெச்சி மகிழ்வாள்,” என்றான், செல்வர் இவ் வியத்தகு மடநம்பிக்கை கண்டு, “அவள் அங்ஙனம் செய்வாளானால்,