நல்வாழ்வுக் கட்டுரைகள்
69
காதலுக்கடுத்தபடி அதன் திறத்தின் சிறப்பில் பங்கு கொண்ட இனப்பண்புகளாகிய நட்பு முதலிய பிற அன்புத் திறங்களிலும் இதனைக்காணலாம்.
காதலில் தோன்றிக் குடும்பக்காதலில் வளர்ச்சியுற்று நாகரிகத்தில் முதிர்ச்சி பெறும் இன்னொரு பண்பு தன்னடக்கமும் மறையடக்கமும் ஆகும். இம் மறைப்பும் அடக்கமும் காதலில்லா வாழ்வில் காணப்படும் வஞ்சக மறைப்போ, வன்மம் உட்கொண்ட அடக்கமோ அல்ல. காண்பவர் கண்டுவப்ப, காணும் பண்பற்ற கயவர் காணாதிருக்கும் முறையில் மறைக்கும் திரை மறைப்பே, காதல் மறைப்பாகும்.
காதலரும், குடும்பத்தாரும், பண்புடையாரும் தனிமையும், ஓதுப்புறமும், தனிக்கூட்டுறவும் நாடுவது தம் பண்பறியாரிட மிருந்து மறைக்கும் மறைப்பேயன்றி, பிறரிடமிருந்து விலகி வாழும் மறைப்பன்று. இம் மறைப்பிற்குக் காரணம் காதலுக்கு ஒரு பண்பும் ஓர் அறிவுக்கலப்பும் இன்றியமையாத் தேவை என்பதே. குடும்ப வாழ்விற்கும் பண்பாட்டிற்கும் கூட அதே வகைப் பண்பும் அறிவுக் கலப்பும் தேவை.
க
காதலரின் காதல் அழகை மட்டும் சார்ந்ததானால், அதனை மறைக்க வேண்டியதேயில்லை. யாவரும் காணும் அழகை அவர்கள் மறைக்கவும் முடியாது. மறைப்பவர் வேலையும் பயனற்ற வேலையாகும். ஆனால் காதல் என்பது புற அழகின் மறைவிலுள்ள அக அழகையும், அதற்கப்பாற்பட்ட அக அழகுத்திறங்களாகிய மனிதப் பண்புகளையும் காண்பதே ஆகும். இவற்றை அறிந்த அவர்கள் அப் போலிப் புற அழகை வீணாகப் பயன்படுத்தமாட்டார்; பிறரையும் பயன்படுத்தவிடமாட்டார்.
60
ணை
காதல் வாழ்வைவிடக் குடும்ப வாழ்வில் இம் மறைப்புக் குறைவதன் காரணமும், பண்புடையார் குழுவில் அஃது இன்னும் குறைவதன் காரணம் யாது? காதலின் தன்மையறிய மட்டுமன்றுக் காதல் வாழ்வின் பயனையும் பகிர்பவரே குடும்பமாக இ கின்றனர். குடும்ப வாழ்வின் நுண் நயமறிந்தவரே பண்புடையார். இவர்கள் அனைவரும் காதல் எல்லை குடும்ப எல்லை பண்பெல்லையறிந்து பேணுபவர். இம்முத்திற எல்லைகளுக்கும் புறம்பான உலகம் நாகரிகப் போர்வை போர்த்தால்கூட உள்ளூர விலங்குலகமேயாதலால் அதனின்றும் விலகுதல் மறைப்பாகாது.