70
அப்பாத்துரையம் - 43
அவர்கள் கண்ணை மறைக்கும் படலத்தை அகற்ற முயலுதலே யாகும் என்னல்வேண்டும்.
காதல் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் காதலர், சிறப்பாகப் பெண்டிர், அழகொப்பனையில் மிகுதியாகக் கருத்துச் செலுத்துவதுண்டு. இதனைச் சிறப்பெனக்கொண்டு பின்பற்று பவரும் உண்டு; இதனைக் கீழ்த்தரப் பண்பென இகழ்பவரும் உண்டு. காதற் பண்பும் வாழ்க்கைப் பண்பு முணைந்தவர். இவ்விரு சாராரிலும் சேர முடியாது.
அழகு நாடுதலும், அழகொப்பனை செய்தலும் காதலின் இயல்புகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இப் பண்புகள் காதல் வளர்ச்சியில் பெருகி வளரும் பண்புகள் அல்ல; நேர்மாறாக தளர்ச்சி பெறும் பண்புகளே யாகும்.
காதலன் பண்பழகில் ஈடுபட்ட அறிவுடைப் பெண் தன் புற அழகின் கவர்ச்சியால் அவனைத் தன் பண்பழகில் ஈடுபடுத்து கிறாள்.புற அழகின் ஒப்பனை அவள் அறிவுப் பண்பின் சின்னம். ஏனெனில், தன்னை அழகுபடுத்தும் பெண்ணே பின்னர்த் தன்னையும்,வீட்டு வாழ்வையும் அழகு படுத்திச் செம்மையுறுத்து கிறாள். தன்னை அழகுபடுத்தும் கை தான் கணவன் வாழ்வையும் பிள்ளைகள் வாழ்வையும் செப்பம் செய்யும் கையாகிறது.
ம
காதல் வாழ்வில் வாழ்வில் தம்மை ஒப்பனை செய்வதில் பெண்களினும் இயல்பாகக் குறைவுபட்ட ஆடவர், பிற்கால வாழ்வில் தத்தம் செயல்களிலும் தம் பொருள்களை வைத்துப் பேணுவதிலும் செப்பமில்லாதவராகவே பெரும்பாலும் இருக்கின்றனர் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. ஆனால், காதல் வாழ்வில் ஒப்பனையில் மிகுதியுங் கருத்தூன்றிய பெண்பாலார், பிற்கால வாழ்விலும் தம் வீட்டையும், வீட்டுப் பொருள்களையும் ஒழுங்குபடவைத்துப் பேணுவதில் கைதேர்ந்தவராகவே இருக்கின்றனர்.
பெண்டிர் அழகு நோக்கு உண்மையில் ஆடவர் நினைப்பது போலப் பிறரைக் கவர்ச்சி செய்வதற்கு மட்டுமுரிய அழகுநோக்கன்று அவர்கள் காரியங்கள் எல்லாவற்றிலும் அது செப்பம் தருகிறது. கவர்ச்சியை அவர்கள் நாடுவதும் பிறரை இயக்கி நற்பயன் விளைவிக்கும் தொலை நோக்குடனன்றி வேறன்று.