உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அப்பாத்துரையம் - 44

கொண்டிருந்தது. அது எங்கே யாரை ஏற்றிக்கொண்டு போகிறதோ என்று அவன் தனக்குள் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

படகைச் சந்திப்பதற்காகப் பாறைக்கு வந்த வடிவம், அவன் பின்னால் பதுங்கி வருவதை அவன் அறியவில்லை!

கப்பலைப் பார்த்தபடியே கரைகாவலன் - 618 பாறை கடலை எட்டிப் பார்க்கும் இடம் வரை வந்திருந்தான். அதற்குள் பின்னாலிருந்தவன் மெல்ல வந்து அவனைக் கடலினுள் தள்ளிவிட்டான்!

கப்பலை உளவு பார்க்க வந்த பகைவன் ஒழிந்தான் என்று அவன் மகிழ்ந்தான். தன்னையே உளவு பார்த்து வந்த மற்றொருவன் தன்னை எதிர்க்கப் பின்னாலிருப்பது அவனுக்குத் தெரியாது.

படகு அருகில் வந்துவிட்டது. இன்னும் சில கணங்களில் அவன் கப்பலேறி அயல்நாடு சென்றுவிடலாம். ஏற்கெனவே நிரம்பப் பணம் திரட்டியாய்விட்டது. இனி இன்னும் பெரும் பொருள் திரட்ட அவன் திட்டமிட்டான்.

பின்னாலிருந்து ஒரு குரல் ராந்தேன் என்று கூவிற்று!

அவன் திரும்பிப் பார்த்தான். அது குளூபின் குரல்! முதலில் இன்னது செய்வதென்று அவனுக்கு விளங்கவில்லை. பின் எப்படியும் அவன் உளவுக்கு ஒரு முடிவு கட்டுவது என்று முனைந்தான்.

அதற்குள் குளூபின் கையிலிருந்த சுழல் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு "ஒரு அடி முன் வைக்காதே! அப்படியே நில்!” என்றான்.

அவன் நின்றான். “உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

“உன்னிடம் என்னவெல்லாம் இருக்கின்றன? சொல்!”

“நீர் யார் கேட்க?”

“நான் சொல்கிறேன். வலதுபுறப் பையில் கைக் குட்டை. சாவிக்கொத்து.இடது பையில் கைத்துப்பாக்கி. ஒரு புகையிலைப்