உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11. டியூராண்டின் முடிவு

தமோலிபாஸ் கப்பல் புறப்பட்டுச் சென்ற மறுநாள் டியூராண்டு கெர்ஸ்னியை நோக்கிப் புறப்பட்டது.

இத்தடவை குளூபின், கப்பலுக்குச் சரக்குகள் ஏற்றுவதைக் கவனிக்கவேயில்லை. ஜீன் ஆபர்ஜில் அவன் இல்லாததால் சரக்குகள் ஏற்றப்படாமலே போயின.

கப்பலில் மீகாமனுக்கடுத்த தலைமைப் பணியாள் தங்க்ரூவில் என்பவன். அவன் கெர்ஸ்னியிலேயே பிறந்தவன். நல்ல உயர்குடியைச் சேர்ந்தவன். கப்பலின் முழுப்பொறுப்பும் அவனுடையதாதலால் கப்பலைவிட்டு அவன் வெளியே செல்வதேயில்லை. அவனுக்கென்று பிறரறியாத ஒரு தனியறை இருந்தது. முழு ஓய்வுகிடைத்தபோது அவன் யாருமறியாமல் அங்கே சென்று தூங்குவான். குடி வகை கிடைத்தபோது அவ்விடத்திலேயே சிறிது குடியாறுதல் அவனுக்கு வழக்கம். ஆனால் இந்த ஒரு குற்றத்தை அவன் யாரும் அறியாமல் மறைத்து வைத்திருந்தான்.

கப்பல் புறப்படுமுன் தங்க்ரூவில் சிறிது ஓய்வு கொள்ளத் தன் அறை சென்றபோது, அங்கே ஒரு குடி வகைப் புட்டி ருந்தது கண்டான். அங்கே யார் வைத்திருப்பார்கள் என்று சிந்தித்தான். யார் வைத்தாலென்ன, ஒளித்து வைத்ததை ஒளித்தே குடிக்கலாம் என்று அவன் நினைத்தான்.

மறுநாள், கப்பலை அவன் சரியாக ஓட்டமுடியவில்லை. ஆனால், இது தெரியவிடாமல் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டினான்.

நாள்பட்ட தேர்ச்சியுடைய கப்பலோட்டிகள் எச்சரித்தனர், அன்று கடல் கொத்தளிப்பும் மூடுபனி மறைப்பும் உடையதா