உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

13. காதல்வீரன் பெற்ற கட்டளை

'டியூராண்டு கடலில் உடைவுற்றது!'

இச்செய்தி ஊரில் பெருங் கிளர்ச்சி உண்டுபண்ணிற்று.

சிலர் இம்முடிவை விரும்பியிருந்தனர். அவர்கள் உள்ளுர மகிழ்ந்தனர்.பெரும்பாலோர் வருந்தினர். ஆனால், லெத்தியரிக்கு அது இடியேறாயமைந்தது. அவன் வாழ்வின் ஆர்வம், நம்பிக்கை, உயிர்த்துடிப்பு யாவும் ஒரு நொடியிலகன்றது. அவன் தசைகள் தளர்ந்தன. உடல் சோர்ந்தது. டெரூசெட் அனுதாபத்துடன் அவன் கையைப் பற்றி ஆறுதல் கூற முயன்றாள்.

ஆனால், முதல் இடியை அடுத்து வேறு செய்திகள் வந்தன. அவை துன்பம் போக்கவில்லை. ஆனால், மரத்துப் போன உணர்ச்சிகளைக் கிளறின.

கப்பலோட்டிகள் குளூபினின் வீர முடிவுபற்றி வானளாவப் புகழ்ந்தனர். பெருந்தன்மையுடன் கப்பலின் கணக்குக் குறிப்பேடுகளை அவன் தந்ததைக் குறிப்பிட்டனர். கப்பல் டைந்தாலும் தாம் வரும்வரை மூழ்கவில்லை என்றும் கூறினர். அதற்குச் சில மணி நேரங்களுக்குப் பின் டூவ்ரேப் பாறை வழியாக ஷீல்டீல் என்ற கப்பல் வந்தது. டியூராண்ட் அடுத்த கடலெழுச்சி யால் பாறையிலிருந்து தூக்கி எறியப்பட்டு உடைந்ததென்றும், அதன் இயந்திரப் பகுதிகளும் நடுச்சட்டமும் உறுதியாயிருந்த தனால் உடையாமல், டூவ்ரே வரிசையின் இரு பாறைகளிடையே அவை சிக்கிக் கொண்டிருந்ததைத் தான் பார்த்ததாகவும் அதன் மீகாமன் கூறினான்.

இரவினுள் யாராவது சென்றால் இயந்திரத்தைப் பழுதுபடாமல் மீட்கலாம்' என்றும் அவன் சொன்னான்.