இருதுளிக் கண்ணீர்
95
"யார் போவார்கள், இந்நேரத்தில்?" "போனாலும் ஒருவர் போய் என்ன பயன்? கப்பல் தச்சர்கள் பலர் அல்லவா வேண்டும்?” "இயந்திரம்தான் கப்பலில் விலையுள்ளது. அதை மீட்டால், கப்பலழிந்தாலும் அழியவில்லை என்றே கூறலாம்!” இவ்வாறாகப் பலர் பலவாறாகப் பேசினர்.
"டியூராண்டின் இயந்திரம் ஒரு இரவு முழுவதும் கெடாது இருக்கும் என்று நான் உறுதி கூறுவேன். ஆனால், அதை மீட்டுக்கொண்டு வரத்தக்க வீரன் உலகில் இருக்க முடியாது" என்றான்,டியூராண்டின் ஒரு கப்பலோட்டி.
லெத்தியரி, இப்போது முதல் முதலாக வாய் திறந்தான். “மீட்டுக்கொண்டு வரத்தக்க வீரன்மட்டும் இருக்கக் கூடுமானால்..”
அவன் முடிப்பதற்குள், டெரூசெட் "அவனை நான் மணந்து கொள்வது உறுதி” என்றாள்.
கில்லியட் அருகில் நின்றிருந்தான். “இது உறுதி தானா,
டெரு!” என்றான்.
அவள் வியப்புடன் 'ஆம்' என்று தலையசைத்தாள்.
லெத்தியரியின்
கண்களில் ஒளி வீசிற்று. அவன்
“அத்தகைய வீரனுக்குக் கட்டாயம் டெரூசெட் சொந்தமாவாள்.
கடவுளறிய இதை நான் உறதி கூறுகிறேன்” என்றான்.
அடுத்தகணம் கில்லியட் அங்கே இல்லை!