இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இருதுளிக் கண்ணீர்
97
அவன் உணவு கொள்ளவில்லை, நன்கு உடுத்தவில்லை. அவ்வளவு படபடப்புடன் விரைந்து சென்றான், டெரூசெட்டைப் பெறுவதற்கான வீரச்செயல் செய்ய! தனி ஒருவனாய் டியூராண்ட் கப்பலின் இயந்திரத்தைத் தூக்கிக் கொண்டுவர!
வேலையின் கடுமை அவன் அறியாததல்ல. பல மனிதர், பல கருவிகள் சாதனங்களுடன் செய்வதற்குக்கூட அரிய செயல் அது என்று அவனுக்குத் தெரியும். ஆனால், அச்செயலுக்கான பரிசு டெரூசெட் என்ற எண்ணம் அவன் துணிச்சலுக்கு இறக்கை தந்தது. அவன் அப்பரிசு பெற, கடலைப் பாயாகச் சுருட்டத் தயார்! வானத்தை வில்லாக வளைக்கத் தயார்!
கடலையையும் அலையையும் அவன் கடந்து சென்றான் பாறையும் புயலும் அவனை அச்சுறுத்தவில்லை. டூவ்ரேயின் பாழ்ந்தடத்தைக் காணும்வரை அவன் ஓயவில்லை. அச்சுறுத்தும் அப்பாறைக்குச் சென்று அமைந்துதான் அவன் சிந்திக்கத் தொடங்கினான்.