இருதுளிக் கண்ணீர்
101
நிலையான கப்பிகளையும் இயங்கு கப்பிகளையும் இடையிட்டு வைத்தான்.
ஒரு நாள் காலையில் உணவு இருக்குமிடத்தில் அவன் உணவைத் தேடினான். அதைக் கட்டோடு காணவில்லை. காற்று அதைக் கீழே தள்ளியிருந்தது. அதன் சிந்தல் சிதறல்களைப் பறவைகள் கொத்தித் தின்றுவிட்டன. தங்கிடத்தை அவன் பறித்ததற்கு மாறாக, அவை அவன் உணவைப் பறித்தன.
அவன் இதுமுதல் சிப்பி, நண்டு, கடற்காளான் ஆகியவற்றையே தேடி உணவாகக் கொள்ள வேண்டியதாயிற்று. தண்ணீர், உணவை விடப்பெரிய பிரச்னை ஆயிற்று. கடல் நீரில் நனைந்து உடைகள் ஈரம் உலராதிருந்தன. ஈர உடைகளிடையே அதன் உப்பு, விடாயைப் பெருக்கிற்று. அச்சமயம் அவன் பறவைகளை நினைத்துப் பார்த்தான். அவை செல்லுமிட மெல்லாம் கூர்ந்து கவனித்துப் பின்பற்றினான். பாறையில் மழைநீர் தங்கிய இடத்தில் அவை நீர் குடித்தன. அவனும் அவற்றையே நாடிச் சென்று குடித்தான். இதற்குள் அவன் தாடி மீசை வளர்ந்து காட்டு மனிதன் போலத் தோன்றியதனால், பறவைகள் அவனைக் கண்டு அஞ்சாமல் பழக்கமாயின.அவனும் கடும் பசியிலும் அவற்றை உணவாக நாடாமல், அவற்றுடன் நேச உடன்படிக்கை செய்து கொண்டான்.
ஒருநாள் கடற்பாசி தேடிப் பாறைகளிடையே ஒரு குகையில் நெடுந்தொலை சென்றான். குகையின் கோடியிலுள்ள இடுக்கால் நீரின் கீழுள்ள ஒரு அழகிய குகைக் காட்சியைக் கண்டான். நீரின் கீழுள்ள ஒளிக்கதிர் பன்னிற வண்ணங்களாய் காட்சியளித்தன. குகையினுள் உட் குகை ஒன்று இருந்தது. அதில் ஏதோ ஒன்று, ஒரு மனித உருவம்போல் காட்சியளித்தது. தொலைப் பார்வைக்கு, குகை-கோவிலாகவும், உருவம் அமைந்த உட்குகை - அதன் மூலச் சிலையாகவும் தோன்றிற்று. தன்னுடைய பெரு வேலைக் கிடையில் இதை அவன் பொருட்படுத்தவில்லை.
எல்லா வேலையும் முடிந்த பின் கில்லியட் தன் பாய்க் கப்பலைப் பாறைக்கிடையில் கொண்டுவந்து நிறுத்தினான். அவன் கப்பிகளின் மூலமும் வடங்கள் மூலமும் இயந்திரத்தை மெள்ளப் பாய்க் கப்பலின் மீது இறக்கினான். முன்பே