இருதுளிக் கண்ணீர்
105
காற்றின் சம்பம் சாயவில்லை. இரண்டு மூன்று நாழிகைக்குப் பின் மீண்டும் அமைதி ஏற்பட்டது.
வ்வமைதி திசைமாற்றத்துக்கான ஓர் ஓய்வு மட்டுமே என்று கில்லியட்டுக்குத் தெரியும். அடுத்த வீச்சு மேற்கிலிருந்து வந்தால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது; கிழக்கில் வந்தால் ஒரு சட்டம் அதைத் தடுத்து நிற்கக் கூடும்; கிழக்கிலேயே வரவிருந்தது என்று அவன் உய்த்துணர்ந்தான். ஆகவே, தான் செய்து முடித்த இரண்டு சட்டங்களில் ஒன்றைக் கிழக்கிலே மாட்டி ஒன்றை மேற்கில் முதற் சட்டமாக அடைத்தான்.
கிழக்கே கடலின் படையெடுப்புத் தொடங்கிற்று. இங்கே சட்டங்களின் உறுதி குறைவு. பாறைகளும் முன்னுள்ளவைபோல் உறுதியல்ல. ஆயினும், தெற்கும் மேற்கும் அடிக்கும் காற்றைவிட இங்கே காற்றுக் குறைவு. சட்டங்கள் அதைத் தாங்கிக் கொண்டன. காற்று இறுதியில் மேற்கே அடிக்கத் தொடங்கிற்று. இவ்வாயிலில் சட்டம் ஒன்றுதான் இருந்தது. அது புயலின் தாக்குதலைத் தணித்தது. ஆனால், சட்டம் வளைந்து நெளிந்தது. புயலின் இடை ஓய்வில் கில்லியட் அவசர அவசரமாக தான் செய்த இரண்டாம் சட்டத்தை அண்டை கொடுத்தான். ஆனால், முதல் சட்டத்தைப் புயல் சிதைத்தபின் அதன் துண்டுகளே இரண்டாவது சட்டத்தைத் தகர்க்கும் உதை குண்டுகளாயின. இரண்டாவது சட்டமும் தளர்ந்தது. எந்த நொடியிலும் புயலின் தாக்குதல் தன்னை அழிக்கலாம். தான் அரும் பாடுபட்டு இறக்கிய டியூராண்டையும் அதைத் தாங்கிய பாய்க்கப்பலையும் மூழ்கடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. தன் கப்பல் அழிவதானால், தான் அழிந்தபின் அழியட்டும் என்று அவன் தனக்குள் உறுதி செய்து கொண்டான். கடைசிப் பேரலை ஒன்று பாய்க் கப்பலைப் பாறை மீது மோதிற்று. கப்பல் பாறையில் நேரடியாக மோதியதாகத் தெரியவில்லை. அதன் மீதிருந்த டியூராண்டின் சட்டமே மோதுதலின் பெரும்பகுதியை ஏற்றது, அதன் புறப்பகுதிகள் அகப்பகுதியிலிருந்து பிளவுபட்டு, கப்பலுக்குப் பாரமாய் தொங்கின.
புயல் ஓய்ந்துவிட்டது. ஆனால், பாய்மரத்துக்கு எந்த நேரமும் இடர் நேரக்கூடும். இரண்டாகப் பிளந்த டியூராண்டின் பகுதி அதன் சமநிலையைக் கெடுத்தது. ஆகவே கில்லியட்