இருதுளிக் கண்ணீர்
109
விட்டன. அந்நண்டுகளையும் பேய் மீன் தின்றுவிடுவதால் தான் நண்டுகளையும் எளிதில் அங்கே காண முடியவில்லை. ஆனால் குகையின் உட்புறம் செல்லும்தோறும் நண்டுகள் பதுங்கி அவ்விரைகளைத் தின்பது கண்டான்.
குகையின் அரை ஒளிக்கும் அவன் கண்கள் இப்போது பழகிவிட்டன. அதனால், அவன் குகைக் கோடியில் தன்னை நோக்கிச் சிரிக்கும் ஒரு மனித உருவைக் கண்டான். அது உண்மையில் ஒரு முழு மனித எலும்புக் கூடு. அதன் சதைகள் முற்றிலும் அரித்துத் தின்னப்பட்டிருந்தன. அதைக் காண கில்லியட்டுக்கு அச்சமும் துயரும் மிகுந்தது. தானும் அம்மனிதன் நிலைக்கு மிகவும் அருகாமையிலேயே வந்திருந்ததை அவன் எண்ணித் திடுக்குற்றான். அவ்வுருவம் யார் என்று அறிய ஏதேனும் உடைகள் எச்சமிச்சம் இருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் காணவில்லை. ஆனால், அரையிலுள்ள தோல் கச்சை, நீரிலூறிக் கெட்டிருந்தாலும், அரையைச் சுற்றி அப்படியே தொங்கிக் கிடந்தது. கத்தியால் அவன் அதை வெட்டி எடுத்தான். அதன் நடுவில் சதுரமான கெட்டிப் பொருள் ஏதோ இருந்தது. அது ஒரு இரும்புப் பெட்டி. துருவேறி அது திறக்க முடியாததா யிருந்தது. அவன் அதைப் பாறையில் மோதி உடைத்தான். உள்ளே இருந்து சில வெண்காசுகள் விழுந்தன. எழுபத்தை யாயிரம் வெள்ளிகளுக்குச் சரியான மூன்று நோட்டுகளும் இருந்தன. அதிலிருந்த ஒரு சிறு துண்டில் குளூபின் என்ற பெயரும் இருந்தது.
எலும்புக்கூடு குளூபினுடையதே என்றும், நீந்திப் பாறைக்கு வருமுன் பேய்மீனுக்கு அவன் றையானான் என்றும் கில்லியட் அறிந்து கொண்டான்.
பேய்மீன் குகை அவனக்குக் காலன் குகையாக முதலில் தோற்றிற்று.இப்போது காலத்தின் பரிசும் அவனுக்குக் கிட்டிற்று.
மறுநாள் அவன் காலையிலேயே பாய்க் கப்பலுடன் புறப்பட்டு கெர்ஸ்னி வந்து சேர்ந்தான்.