உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

113

காதலர் அவனுக்காக வருந்தினர்.டெரூசெட் தான் பனியில் அவன் பெயர் எழுதி அவனை நையாண்டி செய்த குறும்பையும், டியூராண்டைத் தேட அனுப்பிய ஆவேச ஆர்வ உரையையும், நினைத்து வருந்தினாள். காட்ரே, தன்னை கில்டாமரிலிருந்து காத்தவன் வாழ்வைத் தன் கையால் அழிக்க நேர்ந்ததே என்று வருந்தினான்.

காஷ்மீர் கப்பலில் காதலர் கைகோத்துக் கொண்டிருந்தனர். கப்பல், கில்டாமர் கடந்து சென்றது. கில்டாமர் மீது கடல் பொங்கி வந்து கொண்டிருந்தது. அதில் தான் இருந்த இடத்தில் மற்றொருவன் இருப்பதையும், அவன் நெஞ்சுக்கு மேல் தண்ணீர் ஏறி விட்டதையும் கண்டு காட்ரே “ஆ” என்றான்.

டெரூசெட்டும் அவ்வுருவை நோக்கினாள். “ஆ! கில்லியட்” என்றாள். கவலையற்ற அவள் உள்ளத்தில்கூட அவன் தியாகமும் பெருந்தன்மையும் ஆழ்ந்து பதிந்தன.

‘ஒரு கடல்மறவன் பெற்ற கன்னி நான். மற்றொரு கடல் மறவன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட கன்னியானேன்' என்று அவள் பெருமூச்சு விட்டாள்.

கடல் மறவர் மரபுக்குத் தன் காதல் ஒரு களங்கமாயிற்று என்று காட்ரே எண்ணினான். அவ்வெண்ணம் அவன் கையினூடாகச் சென்று டெரூசெட்டின் கைகளை அழுத்திற்று. இரண்டு கண்ணீர் துளிகள் அவள் கண்களிலிருந்து காட்ரே தோள்களில் விழுந்தன.

கிலியட்டின் ஒப்பற்ற தியாகத்திற்கு அவளின் அன்புக் காணிக்கை “இருதுளிக் கண்ணீர்.’

""