உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




19. அறக்கோட்டம்

பணிமனையாகவே

கண்ட கண்ட இடமெல்லாம் கடவுளர் கோட்டங்களாகக் காட்சியளிப்பது காசிமாநகரம். அதன் முக்கியக் கலைக் கோட்டமாகத் திகழ்ந்தது அரசியார் கல்லூரி. மாதத்துக்கு ஒருநாள், ஆண்டுக்குச் சில நாட்கள் கல்லூரி ஒரு முதல் தரப் காட்சியளிக்கும். அந்நாட்கள்தாம் மாணவர்கள் சம்பளங் கொடுக்க வேண்டிய நாட்கள். கல்வியைப் பற்றிக் கவலைப்படாத மாணவர் பலர் அந்நாட்களில் கவலைப்படுவர், கல்விக்காகச் செலுத்த வேண்டிய கூலியைக் குறித்து! அது போலவே, ஆசிரியரும் ஆட்சியாளரும் மாணவர் கல்வியில் காட்டும் கருத்தையும் கண்டிப்பையும் விட, அந்தக் கூலியில் கருத்துச் செலுத்துவர்; கண்டிப்புக் காட்டுவர்!

முற்பகல் பொழுது ஏறி உச்சியை அணுகி விட்டது. ஏவலாட்களின் விரைந்த நடை தவிர, புறவாரங்களில் வேறு எவர் நடமாட்டமும் கிடையாது. கதவுகளின் வழியாகவும், பலகணிகள் வழியாகவும், புற்றின் புழை வாயில்களில் எறும்புகள் போல, மாணவர் தலைகளும், உருவங்களும் முன்னும் பின்னும் அசைந்தாடின. வெண் பொற்காசுகளின் கணகண நாதத்தி லீடுபட்டுக்கலைக்கோட்டம் பகற் கனவு கண்டு கொண்டிருந்தது.

சிறைக் கோட்டத்தில் கைதிகளை வரிசை முறையில்

அழைப்பது போல, ஆசிரியர் ஒவ்வொருவராகப் பெயர் கூறி அழைக்கிறார். பணம் கொடுத்தவர் அமர்கின்றனர். கொடுக்காத வர்களிடம் கேள்விகள், குறுக்கு வினாக்கள் பாய்கின்றன. மாணவர் இன்று வராமலிருப்பது அருமை - இன்று சம்பளம் கொடுக்காமலிருந்தால் பெயரடிக்கப்படும். வராமலிருந்தால் வேறு தண்டனையும் உண்டு. பணம் கொடுக்க வேண்டிய கடைசி நாள் அது. அத்தகைய நாளுக்குரிய கண்டிப்பு ஆசிரியர் மூக்குக் கண்ணாடி கடந்து அவர் கண்களில் நிழல் வீசிற்று.