உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

பெயர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீறிட்டு முழங்கின.

“அமர்காந்த்!”

அரவமில்லை. ஆசிரியர் மீண்டும் முழங்கினார். “அமர்காந்த்!”

115

மாணவர்களின் இருக்கைகளை நோக்கி அவர் கண்கள் சுழன்றன. “இன்று அமர் ஏன் வரவில்லை? இன்று கொடுக்கா விட்டால், பெயரடிக்க வேண்டுமே!" என்று அவர் கேட்டார். அவர் குரலில் இப்போது கண்டிப்பு மட்டுமல்ல, சிறிது கவலையும், ஓரளவு கனிவும் கலந்திருந்தன. ஏனெனில், அமர் பணந் தரமுடியாமல் ஓடிவிடக்கூடிய மாணவனல்ல. கோடி குவித்த செல்வர் வீட்டுப் பிள்ளை. அதேசமயம் மற்ற செல்வர் வீட்டுப் பிள்ளைகளைப் போல அவன் ஆகா வழியுமல்ல; படிப்பில் மசணையுமல்ல.

ஒரு மாணவன் எழுந்து நின்றான். "ஐயா அமர் பணம் வாங்கத்தான் போயிருக்கக் கூடும். நான் போய்ப் பார்த்து வருகிறேன்” என்றான்.

அவன் அமர்காந்தின் நண்பன் சலீம். அவனும் செல்வர் வீட்டுப் பிள்ளைதான். படிப்பில் அமர்காந்த் அவனுக்குக் குரு. விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் உலகியல் காரியங் களிலும் அவன் அமர்காந்துக்குக் குரு.

புறவாரங்களில் எங்கும் தேடியாய் விட்டது. இனி னி வீட்டுக்குத்தான் போய்ப் பார்க்க வேண்டும். ஆனால் கல்லூரியின் புறவெளியில் மரநிழலில் யாரோ முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அது யார்? ஆம், அது அமர்காந்த் தான். சலீம் கால்கள் விரைந்து அப்பக்கம் நாடின்

"ஆசிரியர் அங்கே உன் பெயரை அழைக்கிறார். நீ இங்கே நிற்கிறாய். இன்னும் நேரம் தாழ்த்தினால், பெயரை அடித்து விடுவாரே!” என்றான் அவன்.

அமர்காந்த் ஒன்றும் மறுமொழி கூறவில்லை. ஆனால், கலங்கியிருந்த அவன் கண்களிலிருந்து கங்கையும், யமுனையும் பாய்ந்தன.