இருதுளிக் கண்ணீர்
119
கவலை ஏற்பட்ட வகையை நைனா விளக்க விரும்பவில்லை. ஆயினும் பேச்சைத் தொடர்ந்தாள். “சம்பளத்துக்கு உன்னிடம் பணம் இல்லை. என்ன செய்தாய்?" அமர் தன்னிடம் இல்லாதிருந்ததை ஒத்துக்கொண்டு, சலீம் கேளாது செய்த உதவியைப் பாராட்டினான். தன் கணக்கு எங்கோ எப்படியோ தவறி விட்டது என்பதை நைனா உணர்ந்தாள். ஆனால், சலீமின் கடனை எப்படியும் தீர்க்கச் செய்ய வேண்டுமென்று விரும்பினாள். அவள் உடனே "நீ ஏன் என்னிடத்தில் கேட்கவில்லை. இதோ பணம் இருக்கிறது. நாளை சலீமிடம் கொடு” என்றாள்.
“உன்னிடம் பணம் ஏது?'
"அப்பாவிடம் உன் சம்பளத்துக்கு என்று கேட்டுத் தான்
வாங்கினேன்'
""
"அப்பாவிடம் எனக்காக நீ கேட்டிருக்கக்கூடாது.அவரிடம் கேட்டு வாங்கித்தான் படிக்க வேண்டுமென்றால், எனக்குப் படிப்பே வேண்டாம்”
நைனா சிரித்துக்கொண்டு "தருவது அப்பா அல்ல, நான்தான்” என்று கூறி அவன் சட்டைப்பையில் பணத்தைப் போட்டாள்.
நைனாவிடம் அவன் என்றும் கோபம் காட்டியதில்லை. இன்று காட்டினான். அந்தப் பணத்தை எடுத்து வீசி எறிந்தான். வெள்ளிக்காசுகள் மூலைக்கொன்றாக உருண்டோடிச் சிதறின.
பாவம்! நைனா ஒன்றும் கூறாமல் குனிந்து வெள்ளிகளைப் பொறுக்கலானாள். அவள் வாய்பேசாப் பொறுமை அவன் சீற்றத்தைத் தணிய வைத்தது. ஆனால், அதற்குள் சமர்காந்த் அந்தப் பக்கம் வந்தார்.
"என்ன திமிரடா உனக்கு? பணத்தை இப்படி வீசி எறிய! சம்பாதித்தாலல்லவா தெரியும் உனக்கு, அதன் அருமை?” என்று அவர் உறுமினார்.
அவன் முகத்தைச் சுளித்துக்கொண்டு, “உங்கள் பணத்தின் அருமை உங்களோடு இருக்கட்டும். எனக்கு வேண்டாம்" என்றான்.