122
அப்பாத்துரையம் - 44
அழவேண்டிய நேரம் சிரிப்பாள், சிரிக்க வேண்டிய நேரம் அழுவாள். நைனா நீங்கலாக, அமர் அன்பு செலுத்திய ஒரே ஆள் அவ்வீட்டில் அவளே அவளிடம் அமர் கொண்ட பரிவில் பாசம் கலந்திருந்தது. அவள் அழைப்பைத் தட்ட மனமின்றி அவன் உடன் சென்றான்.
•
சுகதா முற்றிலும் அறிவற்றவளும் அல்ல; குடும்பப் பாசம் அற்றவளும் அல்ல. கணவனைப் பற்றி அவள் இதுவரை கவலைப்பட்டதில்லை; சிந்தித்ததுமில்லை. கணவனுக்கும் மாமனுக்கும் உரிய வீடு அது என்பதை மட்டும் அவள் அறிந்திருந்தாள். ஆனால், தந்தையும் மகனும் பேசியவகை அவளுக்குப் புதிதாயிருந்தது. அமர் பேச்சு இன்னும் புதுமையாக இருந்தது.புதுமையில் அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
சமர்காந்த் சுகதாவிடம் வந்து, "உன் கணவனை நீ தான் சென்று திருத்த வேண்டும். அவனுக்குக் குடும்பக் கவலை தெரியவில்லை. எனக்கு வயதாகிவிட்டது. இனி அவன் தானே என் அலுவலைப் பார்க்க வேண்டும். ஒருநாளைக்கு ஒன்றிரண்டு மணி நேரமாவது கடையிலிருந்து பழகினால் என்ன? நாள் முழுவதும் ஒன்று பள்ளியில் இருக்கிறான் அல்லது இராட்டை சுற்றுகிறான்” என்று கூறியிருந்தார்.
“நைனா உங்களுக்காகப் பாடுபட்டுப் பக்கடா செய்து வைத்துக்கொண்டிருக்கிறாள். ஏன் சாப்பிட வரவில்லை?” என்று தொடங்கினாள் சுகதா.
“எனக்குப் பசியில்லை.”
“நைனாவுக்குப் பசிக்காதா?”
“அவள் சாப்பிடட்டுமே?"
“நீங்கள் சாப்பிடாமல் அவள்தான் சாப்பிடமாட்டாளே!"
அவன் பேசாதிருந்தான். "நீயும் அவளும் சாப்பிடுங்கள். எனக்கு வேண்டாம்" என்றான்.
"நைனா சாப்பிட்டாலும் நான் சாப்பிடப் போவதில்லை. அவளாவது அவள் அப்பா பணத்தைச் செலவு செய்து சாப்பிடப் போகிறாள். நான் நீங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தைத்தானே சாப்பிட முடியும்!”