உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

அப்பாத்துரையம் - 44

சுகதாவின் முகத்தில் வெற்றிக்களிப்பு முழுநிறைமதி எனக் களைவீசிற்று. கட்டுப்படாத குதிரைபோலத் திமிறிக் கொண்டிருந்த அமர், அதன் நிலவொளியில் செயலற்று உலவினான். அவனது புதிய கட்டுப்பாட்டில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. சுகதாவின் அன்பணைப்பில் அடங்கி அவள் விருப்பப்படியெல்லாம் குழைந்து நடந்தான். தந்தையின் கடையில்கூட அவன் இருக்கத் தொடங்கினான்.

அவ்வாண்டுத் தேர்வில் அமர் மெட்ரிக்குலேஷனில்

முதல்வனாகத் தேறினான்.

என்று

சுகதா வழக்கம்போல ஒருநாள் கணவன் வீட்டி ல் இருந்துவிட்டு வந்துவிடுவாள் என்றே அவள் தாய் இரேணுகா நினைத்திருந்தாள். ஒருநாளில் வராதுபோகவே ஒவ்வொரு நாளும் நாளை வருவாள், மறுநாள் வருவாள் காத்திருந்தாள். வாரம் பலவானபின் அவளால் இருக்க முடியவில்லை. முதல் வாரத்தில் சிறிது மகிழ்ச்சிகூட இருந்தது. 'கணவன் வீட்டிலுள்ள பாசம் வளரத் தொடங்கிவிட்டது. இது நல்லதுதானே' என்று அமைந்தாள். ஆனால், நாள் செல்லச் செல்லக் காணவேண்டும் என்ற ஆவல்- தன்னை மறந்து விட்டாளோ என்ற கோபம்- அங்கே என்ன நிலையில் இருக்கிறாளோ என்ற கவலை - இம்மாதிரி பல உணர்ச்சி அலைகள் அவள் உள்ளத்திலெழுந்தன. இறுதியில் அவள் தானே லக்னோவிலிருந்து புறப்பட்டு, காசி வந்து சேர்ந்தாள். சம்பந்தி வீட்டுக்கு நேரே வரவிரும்பாமல், கோயில் அற நிலையங்களுக்கு வரும் முறையில் வந்து, மகளையும் பார்த்தாள்.

-

“அம்மா, நீ என்னை மறந்தேவிட்டாய். புக்ககம் உனக்கு அவ்வளவு சர்க்கரையாய்ப் போய்விட்டது அல்லவா?” என்று தாய் கேட்டாள்.

சுகதாவுக்கு உண்மையிலேயே வெட்கமாய்விட்டது. ஆனாலும், முன்போல் அம்மாவிடம் ஆவலுடன் சென்று அவளைக் கட்டிக்கொள்ள முடியவில்லை. அயலாரிடம் கூறும் விளக்கந்தான் அவளுக்கும் தரமுடிந்தது. “நான் என்ன செய்யட்டும், அம்மா. இப்போது அங்கே இங்கே விலக வழியில்லாமல் ஆய்விட்டது.

“அப்படி என்னம்மா வேலை ஏற்பட்டுவிட்டது உனக்கு?