இருதுளிக் கண்ணீர்
125
இப்போது வீட் வீட்டுவேை வலைகளை நீயே செய்யத் தொடங்கி விட்டாயா?”
“அதொன்றும் இல்லையம்மா. மாமாவுக்கும் அவருக்கும் ஏதாவது சச்சரவு ஏற்படுகிறது. அது முற்றிவிட்டால் என் நிலை என்ன ஆகும்?”
மகளிடம் ஏற்பட்ட மாறுதல், அவள் பிரச்சினைகள் தாய்க்குப் புரியவில்லை.“என்ன சச்சரவு? அதனால் உனக்கு என்ன கவலை?” என்றாள்.
“அவருக்கு வட்டித்தொழில் என்றாள் வெறுப்பு. உலக வாழ்விலேயே பற்றுதலற்றவர்போல என்னென்னவோ பேசுகிறார். தந்தையையும் தொழிலையும் உதறிவிட எண்ணு கிறார். இப்படிப்பட்ட இடத்தில் என்னைத் தள்ளிவிட்டாய் என்று முதலில் நான் உன்னைத்தான் நோகத் தொடங்கினேன்; பின்னால் எப்படியும் நான்தானே சமாளிக்க வேண்டும் என்று கருதி அதில் முயன்றேன். ஆனால், இந்தப் பொறுப்பு எனக்கு ஓய்வொழிவு இல்லாமல் வேலை கொடுக்கிறது."
இரண்டு வாரத்தில் தாயைக் குற்றம் சொல்லும் அளவுக்கு மகள் வளர்ந்துவிட்டாள். தாய் உள்ளம் அவள் புதிய வாழ்வும் பாசமும் கண்டு சிறிது பொறாமை கூட அடைந்தது. ஆனால், தாய் அறிவு விரைவில் மாறுதலின் எல்லையை மதிப்பிட்டது. சுகதாவை ஊன்றிக் கவனித்தபோது அவளும் ஒரு தாயாகி விட்டாள் என்று தெரிந்தது.
தாய் எவ்வளவு வற்புறுத்தியும் சுகதா புக்கம்விட்டு லக்னோ வர மறுத்துவிட்டாள். பிள்ளை, தாயைப் பிரிந்திருந் தாலும் தாய்க்குப் பிள்ளையை மறந்திருக்க முடியவில்லை. அவள் நிலையாகவே காசியில் வந்திருக்கத் திட்டமிட்டாள். தான் கோயில் குளங்களில் திருத்தொண்டு செய்துகொண்டு காசியில் இருக்க விரும்புவதாகவும், அதற்கு வசதியாக ஒரு சிறு வீடு அமர்த்தி வைக்கும்படியும் அவள் மருமகனுக்கு எழுதினாள். அது வகைச் செலவுக்காக அவள் ஆயிரம் ரூபாயும் அனுப்பினாள்.
அமருக்கு சுகதாவின் மீதுள்ள பாசம் சுகதாவின் தாய்மீதும் படர்ந்தது. அத்துடன் சுகதா சோம்பேறியான அவனைச்