இருதுளிக் கண்ணீர்
131
சமர்காந்தின் தொடர்புகளுள் இதற்கு நேர்மாறான மற்றொன்றும் அதே நாள் அமர் அறிவுக்கு எட்டியது. அது ஒரு பட்டாணிக்கிழவி சம்பந்தமானது. அவள் கணவன், சமர்காந்திடம் பணிபார்த்தவர். கணவன் இறந்து அவள் வறுமையின் பிடியில் அவதியுற்றாள். அவளுக்கு யாரும் உதவி கிடையாது. சமர்காந்த் அவளுக்குக் கணவன் இருக்கும்போது கொடுத்த தொகையிற் பாதி கொடுத்து வந்தார். சமர்காந்த் வர நேரமாகவே, அமர் தானே அத்தொகையைக் கொடுத்தான். அத்துடன் அவள் நடக்க முடியாதவளாயி யி ருந்ததனால், அவளை வண்டி வைத்து அழைத்துச் சென்று, வீட்டில் கொண்டுவிட்டான்.
பட்டாணிச்சிக்குச் சகீனா என்று ஒரு புதல்வி இருந்தாள். அவள் அந்த வறுமையிலும் எப்படியோ தானாகப் பின்னல் வேலை கற்று, அழகிய கைகுட்டைகள் பின்னியிருந்தாள். பட்டாணிச்சி அமரின் பெருந்தன்மை கண்டு அவனிடம் ஒரு கைக்குட்டையை அன்பளிப்பாகத் தந்து, "இதனை யாராவது வாங்கினால், ஏழைகளாகிய நாங்கள் பிழைப்போம். தவிர உன் பட்டாணி நண்பரில் யாராவது இருந்தால், என் சகீனாவை மணம் செய்வித்து உதவு” என்று கூறினாள்.
ஏழைகள் வறுமைபற்றி மேடையில் பேசிவந்த அமருக்கு, அது உண்மையில் தன் கற்பனை கடந்தது என்பது அவ்வீட்டின் காட்சியினால் தெரிந்தது. வறுமையை மறைக்க வறியோர் மேற்கொள்ளும் முயற்சியே அதன் கொடுமையை எடுத்துக்காட்டத்தக்கது. கொலை செய்தவனும் வஞ்சகனும் தம் கொலையையும் வஞ்சகத்தையும் மறைக்கப் பாடுபடுவதைவிட, ஏழை தன் ஏழ்மையை மறைக்கப் பாடுபடவேண்டியிருப்பதை அவன் கண்டான். தன்னாலியன்ற மட்டும் ஏழைகளுக்கு உதவும் உறுதியுடனும், அதுபற்றிய மனக்கோட்டையுடனும், அவன் வீடு திரும்பினான்.
காலேகானின் செய்தி கேட்டதும் சமர்காந்துக்குக் கோபம் வந்தது. அவர் திருட்டுகளைக்கூட ஆதரிப்பது கண்ட அமருக்கு அதற்குமேல் கோபம் வந்தது. வட்டித் தொழிலால் ஏழைகள் கழுத்தை நெரிக்கும் முறையையே அவன் வெட்கக்கேடாக நினைத்தான். கல்விச்சாலைகளுக்குப் பணமில்லாதபோது,