உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

133

அவள் மகிழ்ந்தாள். அவனை அணைத்துக்கொண்டாள். ஆனால், அவள் வயிற்றின் பாரம் அவ்வணைப்பைவிட அவன் மனத்தில் இரக்கப் பண்பை வளர்த்தது. அவன் முன்னிலும் பன்மடங்கு குடும்பத்திலீடுபட்டாலும், பொது வாழ்விலும் முன்போல் ஈடுபட்டான். அதற்காக எவரும் வருந்தவில்லை. னன்றால், பொதுவாழ்வுப் பற்றுக் கடந்த குடும்பப்பற்று அவனை ஈர்த்தது. ஆனால், அக்குடும்பப் பற்றிலும் உள்ளூற ஒரு சமூகப் பற்றுத் தொக்கியிருந்ததென்பதை எவரும் அறியவில்லை. சுகதா வெறும் செல்லப்பிள்ளை என்று அவன் நினைத்திருந்தான். அவள் வாதத் திறமையை அவன் பிற்பட்டுத் தான் கண்டான். இப்போது அவளும் தியாகம், துணிச்சல், தன் மதிப்பு ஆகியவற்றின் ஒரு சின்னம் என்பதைக் கண்டான். தான் கற்றறிந்த உயர் குறிக்கோளைவிட அவள் கல்லாதறிந்த குறிக்கோள் உயர்ந்ததாகுமென்று அவன் மனத்துக்குப் பட்டது. தன் உயரம் பற்றிக் கர்வம் கொண்ட ஒட்டகம் மலையருகே வந்து தன் உண்மை உயர்வளமை அறிந்து அடக்கம் கொண்டது என்னும் பழமொழி அமருக்கு இலக்காயிற்று.

மறுநாள் அமர் கடையில் அமர்ந்திருக்கும் சமயம் ஒரு ஐரோப்பிய மாதும் இரண்டு மூன்று வெள்ளையரும் அங்கே வந்தனர். சமர்காந்த் இல்லாதது கண்டு, சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் செல்ல இருந்தனர். இருவர் இறங்கியாயிற்று. ஒருவர் இறங்கவிருந்தார். அதற்குள் பிச்சைக்காரியாகவும் பைத்தியக்காரி யாகவும் அலைந்த ஒரு இளம்பெண் அவர்கள் அருகே பிச்சை கேட்பதுபோல வந்தாள். திடீரென அவள் கையில் உடைவாள் மின்னிற்று. வெள்ளையருள் ஒருவர் குத்துண்டு உடனே மாண்டார். மற்றொருவர் குத்துண்டு தள்ளாடியக் குற்றுயிராய் விழுந்தார். மூன்றாவது ஆளையும் ஐரோப்பிய மாதையும் அவள் குத்தத் தொடங்குமுன், அமர் தடுக்க முன் சென்றான். அவனை அவள் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். உடனே அவள் முகத்தின் கோர உருவம் மாறிற்று. கத்தியை வீசி எறிந்தாள். தானே தன்னைப் போலீஸிடம் ஒப்படைத்துக் கொண்டாள்.

அவள் வேறு யாருமல்ல. வயற்கரையில் படை வீரர் கொடுமைக்கு ஆளான நங்கையே? அவள் எதிர்பாராச் செயலும் எதிர்பாரா ஆற்றலும் எல்லாரையும் முதலில் வியப்புள்