உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

66

‘சகீனாதான் பின்னியிருக்கிறாள்"

139

"அப்படியானால் எத்தனை கைக்குட்டை வேண்டு மானாலும் கொண்டுவா. ஐந்து வெள்ளி விழுக்காடு நானே காடுக்கிறேன். பிறரையும் கொடுக்கச் செய்கிறேன்'

அவன் அத்துடன் விடவில்லை. “அது சரி. நீ அப்பக்கம் அடிக்கடி போவது எனக்குப் பிடிக்கவில்லை. இந்த இந்து முஸ்லீம் சமூகங்கள் இருக்கின்றனவே, அவை இரண்டுக்குமே உள்ளத்தில் கருணையே இராது. ஆனால், ரோஷம் மட்டும் நிறைய உண்டு. ஏதாவது அவகீர்த்தி வந்தால், அவர்களை அது அவ்வளவாகப் பாதிக்கிறது. வீட்டுப்பிள்ளையாகிய உன் மதிப்புக் கெடும்” என்றான்.

“எனக்கு அத்தகைய போலி மதிப்பைப் பற்றிக் கவலை இல்லை" என்று அமர் அசட்டையாகக் கூறினான். “சகீனா வீட்டின் வறுமை இனித் தீர்ந்துவிடும்" என்ற நம்பிக்கையில் அவன் பட்டாணிச்சியிடம் முதல் கைக்குட்டையின் விலை தரச் சென்றான்.வீட்டில் பட்டாணிச்சி இல்லை. கதவு மூடியிருந்தது. அவன் தட்டினான். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. ஆனால் உள்ளே ஒரே இருட்டாயிருந்தது. ஓர் இனிய பெண்குரல் “அது யார்?" என்று கேட்டது. அவன் குரல் அறிந்து “அம்மா வெளியே போயிருக்கிறாள்” என்றாள்.

"சரி நான் போகிறேன். ஆனால், வீட்டில் ஏன் இருட்டாய் இருக்கிறது, விளக்கு ஏற்றக்கூடாதா?" என்றான்.

“இருக்கிறது”

"தீப்பெட்டி வேண்டுமா?”

“அதுவும் இருக்கிறது”

“பின் ஏன்..."

மறுமொழி இல்லை. தயக்கம், தேம்பி அழும் குரல் கேட்டது. “ஏன் அழ வேண்டும் சகீனா! என்ன செய்தி" என்றான்.

“எனக்கு நல்ல ஆடைகள் இல்லை. எங்கள் வறுமையை நீங்கள் பார்க்க வேண்டாம் என்று எண்ணித்தான் விளக் கணைத்தேன்" என்றாள்.