140
66
அப்பாத்துரையம் - 44
அவ்வளவுதானா? இதோ உனக்கு ஆடை வாங்கி வருகிறேன். அதற்கிடையே உன் முதல் கைக்குட்டையின் பணம் இதோ" என்று நீட்டினான். இருட்டில் ஒரு கை அதை வாங்கிக்கொண்டது.
அப்போது மணி எட்டுக்கு மேலாய்விட்டது. அது நகரின் மூலையாதலால் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. அமர் விழித்தான்.ஆடை தருவதாகச் சொல்லிச் சகீனாவை ஏமாற்றவும் அவன் விரும்பவில்லை. நேரே வீட்டுக்கு வந்து சுகதாவின் சேலைகளில் நான்கு எடுத்துக்கொண்டு சென்றான்.
66
சகீனா சேலைகளைக் கண்டு மலைப்படைந்தாள். அமரைக் கைகூப்பி அண்ணலே, அம்மா முதலில் உங்களிடம் ஆளறியாமல் பேசியபோது அவள் மீது கோபம் கொண்டேன். தாங்கள் உண்மையில் அவள் கூறியதைவிட உயர்குணம் படைத்தவர்கள். உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால், நான் இத்தகைய சேலைகளை உங்களிடமிருந்து பெறக்கூடாது. அம்மாவும் ஏற்கமாட்டாள், ஆகவே, இதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்” என்றாள்.
அதைத் திரும்ப வாங்கும்போது அவன் முகம் சுண்டிப் போய்விட்டது. "இதைத் தருவதில் எனக்கு மகிழ்ச்சியிருந்தது. திரும்பப் பெறுவதில் எவ்வளவு துன்பம் என்பது உனக்குத் தெரியாது.உண்மையில் நான் வருவதுகூட எனக்குத் தீங்கு விளைக்கக்கூடும். நான் இனி இங்கே வரமாட்டேன்" என்றான்.
அவள் “அன்பரே, உம் குணத்தை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனை நான் நன்கு அறிவேன். என் கெட் மதிப்புக்காகத்தான் அஞ்சுகிறேன். தாங்கள் வர வேண்டாம் என்று நான் கூறுவதால் தங்கள் நினைவு எனக்கு இராது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் எப்போதும் உங்களை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் இருள் சூழ்ந்த வாழ்வின் ஒளியாக உங்களைக் கருதுகிறேன்” என்றாள்.
சேலையுடன் சென்ற அமர் மீண்டும் அவ்வழி நாட வே யில்லை. பலநாள் சென்றும் அவன் வராததால் சகீனாவின் உள்ளத்தில் அவனைப் பற்றிய மதிப்பு உயர்ந்தது.