உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

141

அன்பு கலந்த அமர் உள்ளத்தில் தங்கை நைனா தவிர எவரும் இதுவரை இடம்பெறவில்லை. தாய், தந்தை அன்புக்குரிய இடத்தில் அவளே முழுதும் இடம்பெற்றிருந்தாள். சுகதா அழகு மிக்கவள். அவள் அறிவும் ஆற்றலும் அவன் மதிப்பைப் பெற்றன. குழந்தைப் பாசம் அவளுடன் அவனை இணைத்தது. ஆனால், சுகதா அவனைத் தன் குடும்பக் கோட்டையில் சிறைப்படுத்தி யிருந்தாள். அவன் அவள் வளர்த்த பச்சைக்கிளி, அதற்கு வேளாவேளைக்குப் பாலும் பழமும் கிடைத்தது. அடிக்கடி அவள் அதற்குத் தன்னைப்போல் பேச அரும்பாடுபட்டுக் கற்றுக் கொடுத்தாள். ஆனால், கிளிக்கு பச்சைப்பசுஞ் சோலையில் உலவும் இன்பம் கிடைக்கவில்லை. அமர் காதலில் தவழ விரும்பினான். ஆட்சிக்கு ஆளாக விரும்பாமல், ஆள விரும்பினான். சகீனா அழகில் மட்டமானவள், ஆனால், அவள் கைம்மாறு விரும்பாத அன்பு, தியாக உள்ளம், பெண்மையில் அவன் அறியாத மற்றொரு பாகத்தை அவனுக்குக் காட்டின. அவன் அவளைப் பார்க்கவில்லை. அவளிடம் பேசவில்லை. அவள் திசையைக் கால்கள் நாடவில்லை. ஆயினும், அவள் நினைவு அவன் உள்ளத்தை நிறைத்தது. ஆழ்ந்து வேரூன்றிய மரம் நீரூற்றாமலே வளர்வதுபோல, அவன் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்த காதல், நினைவூட்டும் பொருளின்றித் தழைத்து வளர்ந்தது. அவள் வாழ்வில் அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சகீனா வாழ்வில் இப்போது மாறுதல் ஏற்பட்டது. சலீம் வீட்டிலும் பிறசெல்வர் வீட்டிலுமிருந்து அவளுக்குக் கைக் குட்டை மட்டுமின்றி, குழந்தைகள் சட்டை, மேலங்கி பின்னும் வேலை நிறையக் கிடைத்தது. வறுமை மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து அவர்கள் வீட்டை விட்டு விடைபெற்றுச் சென்றது. வீடு முற்றும் பெரிதாகக் கட்டப்பட்டது. கட்டில்கள், படுக்கைகள், வாயில் திரைகள், துணிமணி, கலங்கள் வீட்டில் டம் பெற்றன.

அமர் வாழ்விலும் மாறுதல்கள் நிகழ்ந்தன. ஏழைகள் சேவை இப்போது கனவாகமட்டும் இல்லை. நனவாயிற்று. டாக்டர் சாந்திகுமாரின் சேவாசிரமத்தில் அவன் சம்பளமில்லாத ஆசிரியத் தொண்டருள் ஒருவனாய், முற்பகல் முழுதும் அங்கே கழித்தான். அவன் தொண்டார்வம் டாக்டரின் தொண்டார் வத்தையும் கடந்தது. டாக்டர் கல்லூரியில் பேராசிரியராயிருந்து