(144) ||.
அப்பாத்துரையம் - 44
சுகீனாவின் திருமணம் ஏற்பாடாகி வருகிறது என்று கூறினாள். தந்தையிடம் பரிந்துரைத்துப் பணம் வாங்கித் தருவானென்றே அவள் எண்ணினாள். ஆனால், அவன் காட்டிய மனக்கசப்பும் வெறுப்பும் அவளுக்கு இன்னதென்று புரியவில்லை. அவன் சரேலென்று சகீனா வீட்டிற்குச் சென்றான். வீட்டின் புதுமாறுதல் அவனுக்குத் தெரியாது. ஆயினும் விசாரித்தறிந்து கதவைத் தட்டினான்.
கதவு
சகீனா அவனை எதிர்பார்த்தே இருந்தாள். தட்டியதும் திறந்ததும் ஒரே கணமாயமைந்தன. அவள் அவன் கையைப்பற்றிக் கொண்டு, "என்னை மறந்தே போனீர்கள். இதற்குதான் அன்பு என்று பெயரா?" என்றாள்.
"நீதானே வருவது நல்லதல்ல என்றாய்.”
“ஆம், ஆனால், அது என் விருப்பமல்ல. உங்கள் நன்மையைக் கருதித்தான் சொன்னேன். ஆனால், சொன்னபடியே நீங்கள் நடப்பீர்கள் என்று நான் கனவிலும் கருதவில்லை.
"சொன்னபடியே நடப்பவரைக் கண்டால் எவருக்கும்
பிடிக்காதுதான்.”
"அப்படியல்ல, அதனால் தான் என் உள்ளத்தின் நடு இடத்தில் நீங்கள் வீற்றிருக்கிறீர்கள்.”
"அப்படியானால் உன் திருமணம் பற்றி இன்று கேள்விப்பட்டேன், அதன் பொருள்..."
“பொருள் என்ன? ஏழை வாழ்வு ஏழையுடன் சேர்ந்தது. உங்கள் அன்பு வடிவம் என் உள்ளத்தில் இடம் பெறுவதை அது தடுக்காது.”
66
'அது முடியாது சகீனா, நான் உலகத்தையே வெறுத்தாலும்
வெறுப்பேன்; உன்னை நான் மணந்தே தீருவேன்"
அவள் முதலில் சிரித்தாள். பின் ஆழ்ந்து சிந்தித்தாள். “நீங்கள் உலகை வெறுக்கலாம். சுகதாவை?”
“அவள் நான் வெறுக்கும் உலகின் ஒரு பகுதி. பணக்காரர் வகுப்பின் பெருமை அவளை ஆட்டுகிறது. அவளும் என்னை ஆட்டிவைக்க விரும்புகிறாள். என் வீட்டில் எனக்கு அன்பு