இருதுளிக் கண்ணீர்
147
ஊர்வெளியில் கிணற்றருகில் ஒரு கிழவி நீர்க்குடத்துடனும் கயிற்றுடனும் வந்தாள். அமர் அவளிடம், "தாயே, நான் நெடுந்தூரம் அலைந்தலுத்தேன். ஒரு நாள் இங்கே தங்க டங்கிடைக்குமா?” என்றான்.
"ஏன் கிடைக்காது, குழந்தாய். என்னுடன் வா. என் வீட்டிலேயே தங்கிச்செல்" என்றாள்.
அமர் அவள் தலையிலிருந்து குடத்தை இறக்கி வைத்தான். தானே நீர் இறைக்கத் தொடங்கினான்.
மற்றோர் இளம் பெண் அவ்விடம் வந்து “அத்தை, இது யார்? நம் வீட்டு மாப்பிள்ளையா?” என்று கேட்டுச் சிரித்தாள். கிழவி “ஆம்” என்றாள்.
இளமங்கை “மாப்பிள்ளை வேலை செய்யலாமா? நான் இறைக்கிறேன்” என்று கயிற்றை வாங்கினாள்.
இளநங்கை வேறு யாருமல்ல, காசியில் வெள்ளையர் பழிக்காளாகி அவர்களைக் கொன்று நகரமக்கள் உள்ளத் தலைவியான முன்னிதான். அவள் அரித்துவாரத்தில் பணியாளாயிருந்து அங்கும் கணவன் வந்து மன்றாடியும் அவனை ஏற்க மறுத்தாள். கணவன் பைத்தியம் பிடித்தவன் போலலைந்து மாண்டான். பிள்ளையும் தாயறியாது நலிந்து மாண்டது. இதையறிந்த முன்னி உயிரை வெறுத்து கங்கையில் சென்று குதித்துவிட்டாள். அவளைச் செம்மார் வகுப்பு இளைஞன் ஒருவன் கரையேற்றினான். அவன் அவளை மனமாரக் காதலித்தும் அவள் அசட்டையாயிருந்தாள். அவளுக்காகவே ஆற்றைக் கடந்து மருத்துவரை அழைக்கச் சென்றபோது அவன் படகு புயலில் அகப்பட்டுக் கவிழ்ந்தது. முன்னி புயல்களை எழுப்பியும் புயல் இடையே ஒரு மின்னற் கொடியாகச் செம்மாரர் சேரியில் தங்கினாள்.
அமருக்கு அவ்வூரும் அவ்வூர் மக்களும் பிடித்திருந்தன. அவ்வூர் மக்களுக்கும் அவனைப் பிடித்தது.முன்னியால் ‘அத்தை’ என்று அழைக்கப்பட்ட கிழவியின் பெயர் சலோனி. அவள் வீட்டிலேயே அமர் தங்கினான், அவன் அவளை ஒரு வேலையும் செய்யவொட்டாமல் எல்லாம் தானே செய்தான். குழந்தைபோல