உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

அப்பாத்துரையம் - 44

சலீம், சகீனாவைப் பெண் தெய்வமாகக் கருதினான். எப்படியாவது அமர் வாழ்வை நிறைவுபடத்தி சகீனாவுக்கு அன்பு விடுதலை வாங்கித்தந்து அவளைத் தன் உள்ளக்கோவிலில் அணிய வேண்டுமென்று அவன் திட்டமிட்டிருந்தான். அதன் படியே சகீனாவின் உள்ளத்தையும் அவன் படம் பிடித்துக் காட்டி அவளை நீ மணம் முடிக்க விரும்பினால், நான் அதற்கு உதவியாயிருப்பேன். ஆனால், அவள் வாழ்வை வேறு வழியில் அமைக்க நீங்கள் விரும்புவதாக அவளிடம் தெரிவிப்பதனால், அதனால் பெருந்தன்மை வாய்ந்த அப்பெண்ணரசியை நானே ஏற்கத் தவம் கிடக்கிறேன்” என்று எழுதியிருந்தான்.

66

நைனா அவன் கடிதத்தைச் சுகதாவுக்குப் படித்துக் காட்டினாள். அதற்கு அவள் மறுமொழி எழுதவோ, எழுதும்படி கூறவோ விரும்பவில்லை. ஆனால், நைனா தன் உள்ளத்தைப் பாகாய் உருக்கி அன்புக் கடிதம் வரைந்திருந்தாள்.

சுகதா மட்டும் இன்பவாழ்வும் விரும்பினதினால்தான், தான் வீட்டு வாழ்வில் தரிக்க முடியவில்லை என்று அவன் அதில் எழுதியிருந்தான். சுகதா அதை மறுக்கவுமில்லை; ஏற்கவுமில்லை.

தன்னைப்பற்றி அமர் கொண்ட கருத்து சுகதாவின் வெறுப்பைக் கோபமாகக் கிளறியிருந்தது. "வேண்டாமென்று மனைவியை ஒதுக்கிவைப்பது போதாதாம். அதற்குக் குற்றமும் விளக்கமும்கூறி மேலும் அவமதிக்க வேண்டுமாம். ஆண்கள் குற்றம் செய்தால் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தண்டனை பெறக்கூடாது. பெண்களிடம் குற்ற மிருந்தாலும் தண்டிக்கலாம்; இல்லாவிட்டாலும் தண்டித்து அதற்கொரு குற்றவிளக்கம் செய்யலாம்" என்று அவள் உள்ளூர முணுமுணுத்துக்கொண்டாள். ஆனால், கூறப்பட்ட குற்றத்தை கோபம் அகற்றியேவிட்டது. அவள் ஆடை அணிமணி வெறுத்தாள். குழந்தையிடம் கொஞ்சுவதைக்கூட நைனாவிடம் விட்டுவிட்டாள். இவையிரண்டும் பெண் அடிமையின் சின்னங்கள் என்று இதற்கு அவள் விளக்கம் கூறினாள்.பெண்கள் இயக்கம் பற்றிய நூல்கள் கட்டுரைகள் வாசித்தாள்; எழுதினாள். அவளே பெண்களுக்காகப் பொதுவாகவும், ஏழைப்பெண்களுக் காகச் சிறப்பாகவும் உழைக்கக் கருத்துக்கொண்டாள். கணவன்