இருதுளிக் கண்ணீர்
151
சமூகத் தொண்டை நோக்கித் தான் செல்லத் தொடங்கி யிருப்பதை அவள் கவனிக்கவில்லை.
சமர்காந்தின் உள்ளத்திலும் அமர் போனபின் பெரிய மாற்றம் ஏற்பட்டது. வைதீக சாஸ்திரி ஒருவர் “என்ன கலி காலம் போங்கள்! உங்கள் பையன் ஒரு பட்டாணிச்சியிடம் அல்லவா காதல் கொண்டிருக்கிறானாம்" என்றார். தாம் நல்ல காலத்தில் வளர்த்த புராணப்பாடகர்கூடத் தம்மை இகழ்வது சமர்காந்துக்குப் பொறுக்கவில்லை. "போமையா போம். நீதான் புராணம் படித்தவராயிற்றே. இது ஒன்றும் புதிதல்லவே, உங்கள் கிருஷ்ணன் கோபிப் பெண்களை..." அவர் வாய்மூடுமுன் புராணிகர் ஓடிவிட்டார். பிறரும் அவர் அபாரக் கோபம் கண்டு வாய் மூடினர். வாழ்க்கை அவருக்குக் கசந்து போயிற்று. ஆனால், கசப்பு முதலில் விசித்திர வழிகளிலெல்லாம் பாய்ந்தது. ஆனால், கசப்பு முதலில் விசித்திர வழிகளிலெல்லாம் பாய்ந்தது. சமூகச் சீர்திருத்தமும், புத்தறி வியக்கங்களும் பரவுவது கண்டு சேட்டுகள், செல்வர்கள் ஒரு புறமும், புராணிகர், மதவாதிகள் ஒருபுறமுமாகப் புழுங்கினர்.ஆகவே வியால்ஜி என்ற பழய புராணிகர் ஆதரவுடன் பண்டிதமதுசூதன்ஜி என்ற புதுப் புராணிகரின் கதைக்கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. சமர்காந்த் எவ்வளவு போடுகிறார் என்று பார்த்தபின் மற்ற சேட்டுகள் போட எண்ணினர். தலைவராக வந்தவரிடம் சமர்காந்த் எவ்வளவு செலவாகும் என்றார். அவர் பதினாறாயிரம் ரூபாய் என்று மதிப்பிட்டு “நீங்கள் எவ்வளவு கூடுதல் போட முடியுமோ அவ்வளவும் நல்லது” என்றார்.
சமர்:- நீங்கள் எவ்வளவு போடப் போகிறீர்கள்? தலைவர்:- நூறுரூபாய் போட இருக்கிறேன்?
சமர்:- அவ்வளவுதானே இதற்குப் பலரிடம் போவானேன்? நானே மீதி முழுதும் போட்டுவிடுகிறேன். போங்கள்.
எதிர்பாராத இந்நிகழ்ச்சியால் யாவரும் திகைத்தனர்.
கோவிலில் கதைக்கச்சேரி முன்னிரவிலேயே தொடங்கிற்று. பண்டிதன் பேச்சில் புராணத்தோடுகூட சாதி மதத்துவம், வைதிகர்கள் சேவையின் பெருமை ஆகியவை விளக்கப்பட்டன. ஆனால், எவரும் புராணத்தைக் கவனித்ததைவிட வெளி வாயிலையே கவனித்துக் கொண்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட