152) ||
அப்பாத்துரையம் - 44
மக்கள் எவராவது வந்துவிடக்கூடும் என்ற கவலையே அவர்கள் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. திடீரென்று கூட்டத்தில் கலைசல் ஏற்பட்டது. அடிதடி ‘ஐயோ, ஐயோ' என்ற கூக்குரல், போடா! பிடிடா! அடிடா! என்ற கூச்சல்! பெண்பிள்ளைகளின் அலறல்! கோயில் அமளி குமளிப்பட்டது.
திடீரென்று அமளியில் ஒரு அமைதி ஏற்பட்டது.டாக்டர் சாந்திகுமார் கூட்டத்தின் நடுவில் வந்து நின்றார். அவரும் ஆவேசம் கொண்டவர் போல “பத்கர்களே நன்றாக அடியுங்கள். இன்று அடிப்பவரை அரசாங்கம் ஒன்றும் செய்யாது. கடவுளும் இதற்கு வெகுமதி கொடுப்பார். இன்று இப்புண்ணிய வேளையில் கொடுக்கும் ஒவ்வொரு அடிக்கும் வானுலகில் உங்களுக்கு ஒரு வீசை அல்வா தரப்படும். இன்று கொடுக்கும் ஒவ்வொரு குத்துக்கும் ஒரு முந்திரிக்கொத்துத் தட்டு தரப்படும்" என்று முழங்கினார்.
ஐந்து கணத்துக்குள் கோயில் வெறிச்சென்றாய் விட்டது. கதைக் கச்சேரியின் தடமேயில்லாமற் போயிற்று.
மறுநாள் போலீஸ் பாதுகாப்புடன் கச்சேரி தொடங்கிற்று. கூட்டத்தில் நான்கைந்து பேருக்குமேலில்லை. சுண்டல் வாங்கவரும் பிள்ளைகளைக்கூட அன்று காணவில்லை. ஆனால், அதேசமயம் ஊர் வெளியில் காசிநவஜவான் சபாவின் ஆதரவில் டாக்டர் சாந்திகுமாரே கதைக்கச்சேரி தொடங்கினார். இங்கே புராணம் வேறுமாதிரியாய் இருந்தது. "கடவுள் ஒரு மனித இனத்தைத்தான் படைத்தார்; சாதியைப் படைக்கவில்லை. உயர்ந்தவர், புண்ணியவான்களுக்குக் கடவுள் அவ்வளவு தேவையில்லை; தாழ்ந்தவர் பாபிகளுக்குத்தான் தேவை. செல்வர் உள்ளத்தில், செருக்குடையவர் நெஞ்சில் ஈசன் ஒளி துலங்காது; பணிவுடையார் உள்ளத்தில், துன்பப்படுவர் உள்ளத்தில்தான் ஈசன் துலங்குவான்." இத்தகைய உரை மணிகள் டாக்டர் சாந்திகுமாரின் புராணப் பேச்சில் உதிர்ந்தன.
ஆனால் அவர், தான் வெறும் பேச்சாளர் மட்டும் அல்ல. ஒரு புரட்சித்தலைவர் என்பதைக் காட்டினார். “கடவுள் அன்பையே உணவாகக் கொள்பவர். உங்கள் அன்புக்குக் காத்திருக்கிறார். அடிபட்டும் உதைபட்டும் ஆண்டவனைப் பார்ப்போம் வாருங்கள், ஏழைமக்கள் உரிமைபெறப்