(154) ||
அப்பாத்துரையம் - 44
படைஊர்வலம் செல்வதுபோல் திரண்டு சென்றனர். அணிகள் தெருக்களை நிறைத்துப் பல கல் தொலை நீண்டன. முன்னணி மீண்டும் கோயில்வாசல் முன் வந்தது.
இருபுறமும் மீண்டும் தடியடிகள், துப்பாக்கிக் குண்டுகள் மழையாகப் பொழிந்தன. பலர் வீழ்ந்தனர். ஆனால், விழுந்த டங்கள் படையணிகளில் நிரப்பப்படுவதுபோல நிரப்பப் பட்டன.கூட்டம் குண்டுகளுக்கு மார்பு தர முன் வந்தது. உறவினர் உற்றார் இறந்ததும், மற்றவர் வீறுடன் முழங்கிக் கொண்டு முன்னேறினர். சுகதா ஒப்பற்ற படைத்தலைவர்போல் அஞ்சாநெஞ்சுடன் அவர்களை முன்னின்று நடத்திச் சென்றாள். நிலையுணர்ந்த போலீஸ் படைத்தலைவர் இப்போது பின்சென்று சிலருடன் பேசினார். கோயில் வாசலில் காவல்செய்த கூட்டம் கலைந்தது. கோயில் திறக்கப்பட்டது. ஆவேசத்துடன் முன்வரும் கூட்டத்தின்முன் ஒருவன் முரசறைந்தான்; “கோயில் வாசல் திறந்து விடப்பட்டது. யாவரும் உள்ளே செல்லலாம்” என்று.
“பகவான் வாழ்க, சுகதா வாழ்க, அறம் வெல்க, அன்னை சுகதாவெல்க” என்று கூட்டம் முழங்கிக்கொண்டு சென்றது. வெற்றிக்களிப்பு மாடமாளிகை முதல் ஏழைக் குடிசைவரை எதிரொலித்தது.
அன்றுமுதல் சுகதா வேறுபுதிய சுகதாவாக மாறினாள். அவள் நகரின் முடிசூடா அரசியானாள். அவள் பெயரால் கழகங்கள், நூல்நிலையங்கள் தோன்றின. எல்லா அறநிலையங் களும் அவள் சொற்பொழிவை, ஆதரவை நாடின. மக்கள் டாக்டர் சாந்திகுமாரைக்கூட மறந்தனர். மருத்துவ விடுதியில் ஒரு மாதமாக மீண்டும் கிடந்த அவரை வந்து பார்ப்ப தொகை குறைந்தது. புதிய தலைவரின் புகழ் கண்டு டாக்டர் பொறாமை யடைந்தார். அது தன் பழய நண்பன் அமர்காந்தின் மனைவி என்ற ஒன்றுதான் அவருக்கு ஆறுதலாயிருந்தது. ஆனால் பழைய தலைவராகிய தன்னைப் பார்க்க வராததுகண்டு, அவர் உள்ளூற மனம் புழுங்கினார். ஆனால் டாக்டரிடம் மிகவும் ஈடுபட்ட நைனா, தனித்து அவரை அடிக்கடி பார்க்க வந்தாள். ஒரு தடவை சுகதா போனபோதும் அவள் உடன் சென்றாள்.
ஏழைகள் துயரை நேரே காணுந்தோறும் அமர் உரைகளும் அவன் முகமும் சுகதா கண்முன் நின்று அவளைக் கேலி செய்தன.