உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

155

அவள் உள்ளூற மாறிவந்தாள். நைனா அண்ணனைப் புகழ்ந்தால் அவள் இப்போது மிகுதி கடிவதில்லை.

சமர்காந்துக்குக் குடும்பத்தில் இப்போது ஒரு கவலைதான் ருந்தது. அது நைனா திருமணம். பணத்தை விரும்பிய அவர், இப்போது ஒரு பணமூட்டைக்கே அவளைக் கட்டினார். அது தனிராம் என்ற செல்வச் சேட்டின் பிள்ளை மணிராம். தந்தை, நகரவையின் துணைத்தலைவர். மகன்- தந்தை செல்வத்திலும் பன்மடங்கு பணம் திரட்டி, நகரில் பொருளாட்சி செய்து வந்தான். அவன் ஏழைகளைத் துரும்பாகக் கருதி ஒடிப்பவன்.பெண்களை அவன் மலராகக் கசக்குபவன். அவன் வாழ்வில் நைனா படும் துன்பங்கள் அவள் குடும்பத்துக்குத் தெரியாமல் இருப்பதற்காக, அவன் அவளைத் தாய்வீடனுப்பாமலே வைத்திருந்தான். அத்துடன் அவள் பணத்துக்காகவே அவன் அவளை மணந்திருந்தான். பணம் மணவினை மூலம் வந்துவிட்டதால், இனி அவள் தேவையில்லை. சுகதாவின் புகழால் நகரில் செல்வர் சுரண்டுதலுக்குப் பங்கம் வருவது கண்டு, அவன் அவளைப்போல் பேச்சாளர், கல்வி கற்றவர் ஆன பெண்ணை மணந்து, சமூகத்தை வசப்படுத்த எண்ணங்கொண்டிருந்தான். அத்தகைய ‘பெண் இரை'க்காக அம்மனிதப் பாம்பு காத்துக் கொண்டிருந்தது.

சுகதா, நைனாவை ஒருநாள் பார்க்கச் சென்றாள். அவள் உடல்நலமில்லை என்று கூறி மணிராம் அவளை அணுகி, தன் செல்வ இறுமாப்பையும், இறுமாந்த திட்டங்களையும் அளந்தான். சுகதாவின் தற்பெருமை புண்பட்டது. அவள் பெண்களியக்கத்தில் பேசுவதுபோல் பேசிவிட்டுக் கோபத்துடன் மீண்டாள்.தனிராம் இச்செய்தி கேட்டு மகன் மீது வெகுண்டான். அவளை அமைதிப்படுத்த நைனாவையே அனுப்பினான்.

சுகதா இச்செல்வருக்கு ஒரு பாடம் படிப்பிக்க விரும்பினாள். இப்போது அவள் டாக்டருடன் சேவாசிரமத்தை நடத்தி வந்தாள். இரேணுகா அதற்குத் தன் பெருஞ் செல்வத்தையே கொடுத்திருந்தாள். இருவர் முயற்சியாலும் அது ஒரு முதல்தர கல்லூரி ஆகியிருந்தது. கல்வித்துறையில் மட்டுமின்றி, தொழிற்துறை, ஏழைகளுக்கு வீடு, வாழ்வு வசதி ஆகியவற்றுக்கும் அவர்கள் திட்டங்கள் வகுத்திருந்தனர். அதற்காக அவர்கள் வாங்க எண்ணிய நிலத்தை நகர சபையின்