உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(156) ||

துணைத்தலைவரான

தனிராமும்,

அப்பாத்துரையம் - 44

தலைவரான

ஹாஃலிஸ்ஹாலம் என்பவரும் தாமே குறைந்த விலையில் வாங்க முனைந்தனர். நகரசபைக்குழு அவர்கள் கையிலிருந்ததால், அவர்கள் அதை ஏழைகளுக்குக் கொடுக்க மறுத்தனர். இத்துறையில் பெரிய தொழிலாளர் வேலைநிறுத்தமும் புரட்சியும் நடத்தச் சுகதா உறுதிகொண்டாள்.

உ

சுகதாவனி உறுதி முழுப்பயன் தந்தது. மக்கள் எழுந்தனர், தொழிலாளர் பின்பற்றினர். மறுநாள் உச்சிவேளைக்குள் நகர் அல்லோலகல்லோலப் பட்டது. சுகதா அன்று கைது செய்யப்பட்டாள். போலீஸ் தலைவர்- அமர்காந்தின் நண்பர். அத்துடன் அவர் மக்கள் இதயம் அறிந்து கடைமையாற்றுபவர். அவர் மோட்டாருடன் வந்து அவளை குழந்தை இரேணுகாந்துடன் ஏற்றிச் சென்றார். நைனா இறுதி நேரத்தில், குழந்தைக்கு ஊட்டுவதுபோல் அவளுக்கு உணவு ஊட்டிக் கண்ணீருடன் வழியனுப்பினாள். மக்கள் கடல் போல ஆரவாரித்து “வாழ்க அன்னை சுகதா, வெல்க வீர நங்கை சுகதா” என வானளாவ முழங்கினர். நைனா - சுகதாவின் அரும்பணி, தியாகம், சிறைப்பாடு ஆகியவைபற்றி அமருக்கு எழுதினாள்.

காசிமாநகர் நகரசபைத் தலைவரான ஹாஃவிஸ்ஹாலம், சலீமின் பெரியப்பா. அவர் உதவியால்தான் அவன் படித்தான். படிப்பில் அவன் அமரைவிடப் பிற்பட்டவனாயினும், அமரைப்போல் தாய்தந்தையர் பிடியை உதற முடியவில்லை. அவர்கள் ஆதரவு படிப்பின் குறையை வென்றது. அவன் ஐ.ஸி.எஸ். தேர்வுக்கு அமர்ந்து அதில் தேறினான். தன் நண்பன் அமர் இருந்த மாவட்டத்திலேயே அவனுக்குப் பணியும் கிடைத்தது.

அவ்வாண்டு வடபுல முழுவதும் பஞ்சநிலையிலிருந்தது. அரித்துவாரப் பகுதியில் குடியானவர்கள் நிலமுழுவதும் ஆண்ட நில முதலாளி, வெறும் நில முதலாளி மட்டுமல்ல. அவர் ஒரு மடாதிபதி போன்ற மஹந்து. மக்கள் பொருளியல் வாழ்வுமீது மட்டுமின்றி, அவர்கள் குடும்ப வாழ்வின் எல்லாத் துறையிலும் அவர் ஆட்சி செலுத்தினார். குடியானவருக்குக் குடிக்கக் கஞ்சியில்லை. அக்காலத்திலும் அவர் சோறும் கறியும் பழவகைகளும் மலைமலையாகக் குவித்து வைத்துக்கொண்டு,