உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

157

அவர் புகழ்பாடும் பக்தகோடிகளுக்கு உணவும் உடையும் வாரியிறைத்தார். அமர் இதுவரை அயலாட்சியை எதிர்த் திருந்தான். செல்வரை, உயர்குடியினரை எதிர்த்தான். மதத்தலைவர்களை அவன் அறவோர் என்று கருதினான். ஆதலால், அவர்களை எதிர்க்காமல், அவர்கள் நல்லெண்ணம் பெற்றே உய்திபெற எண்ணினான். ஆகவே, அமருடன் வந்து உழைத்த இராமானந்த அடிகள் மஹந்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும்படி கூட்டத்தில் பேசியபோது, அவன் மறுத்துரைத் தான். பொதுமக்கள் முனைப்பான கருத்துடைய இராமானந் தரையே பின்பற்றலாயினர். இதனால் அவன் மனக்கசப்படைந்து தன் அறையில் வந்து ஓய்வு பெற்றிருந்தான்.

அமர், மக்கள் பணியில் ஈடுபட்டுத் தன்னிடம் மிகுதிப் பற்றுடைய முன்னியைப் புறக்கணித்திருந்தான். அவன் மனக்கசப்பிடையே அவள்பால் அவன் கருத்துச் சென்றது. மூதாட்டி சலோனி, இருவரையும் இணைத்து வைத்தாள். அவள் கருத்துக்குச் சேரித்தலைவன் கூதடும் இணங்கினான். சமயத்தலைவரான மஹந்தை எதிர்ப்பது பாவம் என்றும், வேண்டுகோள் செய்து சரிப்படாவிட்டால் எதிர்ப்பது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். கூதடும் அமரும் மஹந்தினிடம் சென்றனர். அன்று மஹந்து ஒரு திருவிழாவில் ஈடுபட்டிருந்தார். போன இருவருள் மடத்தின் எல்லையிலேயே ஒருவர் நிற்கவேண்டியதாயிற்று. ஏனென்றால் கூதடு தாழ்த்தப்பட்ட வகுப்பினன். சமயத் திருவிடத்தில் அவன் புக முடியாது.ஆயிரம் அரண்மனையின் செல்வம், படைபடையாகக் குதிரை, ஒட்டகை, யானை, துணிமணிகள் ஆகியவை எங்கும் சிதறிக்கிடந்தன. மஹந்தின் திருமுன்பு செல்ல அவர்கள் அரும்பாடுபட்டு இரவு முழுதும் காத்திருந்தனர். பார்க்க முடியாததனால் வேண்டுகோள் எழுதி அனுப்பி விட்டு மீண்டனர்.

சேரியில் இராமானந்த அடிகள் செய்துவந்த பிரசார வேகம் மஹந்தின் கவனத்தை ஈர்த்தது. அவர் அமரை நேரே வந்து பார்க்கும்படி எழுதினார். வந்தபோது அமரை மதித்துத் தேனொழுகப் பேசினார். ஆனால், அரசாங்கத்தார் ணக்கமளித்தபின்தான் சலுகையளிக்க முடியும் என்று கூறினார். அவர் இன்னுரை கேட்டு அமர் மகிழ்ந்து மீண்டு