உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(158) ||.

அப்பாத்துரையம் - 44

வந்தான். அவன் மதிப்பு உயர்ந்தது. அது கண்டு இராமானந்த அடிகளும் அவனுடன் வந்து சேர்ந்தார். இறுதியில் எல்லோரும் விரும்பியபடி முழுவரிக்குறைப்பும் வரவில்லை. பலர் எதிர் பார்த்தபடி அரையளவும் குறைக்கவில்லை. கால் அளவே குறைந்ததாக மஹந்து அறிவித்தார். இது அரசாங்கம் குறைத்துக்கொள்ள இணங்கிய அளவு மட்டும், மஹந்து தன் பங்கில் குறைவுசெய்ய விரும்பவில்லை. மேலும், பணியாளர் முடிந்தமட்டும் பிரிக்கத் தொடங்கினர். அமரும் இராமானந்தரும் இணைந்து புரட்சிக்குச் சட்டம் கட்டினர்.

அமர் பேச எழுமுன் நைனாவின் கடிதம் வந்தது. அதில் சுகதாவின் பெருந்தியாகம், அவள் சிறைப்பட்டது ஆகியவை வரையப்பட்டிருந்தன. அமருக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் பன்மடங்கு பெருகின. அவனை அறியாமலே அவன்

வேசத்துடன் பேசினான். பேசி முடியுமுன் மக்கள் உள்ளங்களில் புத்தூக்கமும் புதுவேகமும் எழுந்தன. இராமானந்த அடிகள் முதலிய பிற தலைவர்களும் அதே புயல் வேகத்தில் பாய்ந்து முன்சென்றனர்.

புதிய மாவட்ட முதல்வர் சலீமுடன், மாவட்டமுதல் நீதிபதி கஃச்னவீ, அமரின் புதிய போக்குப்பற்றி ஆராய்ந்தார். அமரை இதற்குமுன் இருவரும் வரவேற்றுப் பேசியிருந்தனர். அவன் முன்னேற்றக் கருத்துகளை அவர்களும் மதித்தனர். ஆனால் அவன் மக்கட்கிளர்ச்சி செய்வது அவர்களுக்குப் புதிதாயிருந்தது. அது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது கஃச்னவீ அமரைக் கட்டாயம் சிறைசெய்ய வேண்டும் என்று விரும்பினார். அமர், சலீமின் நண்பனாதலால் சலீமே சென்று சந்தடியின்றி அமரை அழைத்துவரும்படி அவர் கூறினார். சலீமும் மோட்டாரில் சென்று அமரை அழைத்துவந்து சிறைப்படுத்தினான். வழியில் முன்னி அவர்களைக் கண்டாள். அமர், தன் சலவை ஆடைகளை வாங்கி அனுப்பும்படி அவளிடம் தெரிவித்ததிலிருந்து அவள் உண்மையை ஊகித்துக் கொண்டாள். உடனே அவள் சென்று ஊர்திரட்டி மோட்டாரை வழிமறிக்க முயன்றாள். அமர் அவர்களிடம் "நீங்கள் சட்டத்தை மதித்து உரிமைக்குப் போராடுங்கள். என் தொண்டை விடாது செய்யுங்கள்" என்று கூறிச் சென்றான்.