இருதுளிக் கண்ணீர்
159
சலீமின் அடக்குமுறையை மக்கள் உக்கிரமாக எதிர்த்தனர். சலீமும் பொறுமையிழந்தான். சலோனி அவனையே அடக்கு முறையின் பாறுப்பாளனாகக்கொண்டு, அவன் மீது கல்மாரிவீசி வைதாள். அவன், அவள் கிழவி என்றும் பாராமல் அடித்துத் துன்புறுத்திக் குற்றுயிராக்கினான். அவள் உடலெல்லாம் நைந்திருந்தது. முகம் உப்பியிருந்தது. கால் எலும்புகள் முறிந்துவிட்டன. பலநாள் படுக்கையில் கிடந்து அவள் உயிருக்கு மன்றாடவேண்டி வந்தது. ஆயினும் படுக்கையிலும் சரி, அதிலிருந்து எழுந்து கட்டைக் காலுடன் தண்டூன்றி நடக்கும்போதும் சரி, சலீமைப் பழிப்பதும், அவன்மீது பழிவாங்கத் துடிப்பதும் அவள் உடலில் ஒட்டியிருந்த உயிரின் ஓரே வாதனையாயிருந்தன.
சிறை வாழ்வில் அமர் வரையில் சுகதாவின் கருத்து மாறி வந்தது. ஒருநாள் அவள் அறைக்கு மற்றொரு பெண் கைதி கொண்டுவரப்பட்டாள். கைதி வேறுயாருமல்ல, முன்னியே. அவளும் அமரின்பின் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்தாள். பின் காசிச் சிறைக்கு மாற்றப்பட்டாள். அவள் கதை கேட்ட பின், சுகதாவுக்கு, அமரை பற்றிய இன்னும் பல விவரங்கள் தெரிந்தன. அவன் சிறை வாழ்வு, முன்னி அவனை மனமாரக் காதலித்ததும் அவன் அகக்கனிவன்றி உடற் காதலிலீடுபடாதது ஆகியவற்றை அறிந்ததே, அவள் உள்ளத்தில் அமர் அமர்ந்த இடம் மேலும் உயர்வுற்றது. அவள் அவனுக்காகத் துடித்தாள்.
குடும்பத்தின் தியாகத்தீ சமர்காந்தின் துன்ப உள்ளத்தைத் துறவுள்ளமாக மாற்றியிருந்தது. அவர் தம் பெருமைகளை உதறிவிட்டுச் சுகதாவைப் பார்க்க வந்தார். சுகதாவின் தியாகத்தை அவர் பாராட்டிப் புகழ்ந்து, தன் கொடுமைகளுக்காக வருந்தினார். அவர் மனமாற்றமறிந்த சுகதா தானும் அமரிடம் கொண்ட புதுமதிப்பை வெளியிட்டு, "அவர் சிறையில் அவதியுறு கிறாராம்.சலீமே இக்கொடுமை செய்கிறானாம். சென்று அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ய ஏற்பாடு செய்வீர்களா?” என்று கேட்டாள்.
"அதுவே என் திட்டமும், அதுபற்றிப் பேசவே வந்தேன்”