உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

அப்பாத்துரையம் - 44

"நீங்கள் போகிறீர்களா? எப்போது புறப்படுகிறீர்கள்?"

66

இதோ, சிறையிலிருந்து நேரே போகிறேன்."

சமர், அரித்துவாரம் சென்று அதன் அழிபாட்டைக் கண்டு மனம் வெதும்பினார். சலோனியின் நிலைகண்டு பின்னும் உளம் நைந்தார். ஏழைகள் துயரம் என்ன என்று இப்போது அவருக்குத் தெரிந்தது. சலீமை நேரே சென்று பார்க்க அவர் புறப்பட்டார். அதற்குள் சலீமுடன் சில குதிரை வீரர் ஊர் மக்களை அடித்துத் துவைப்பது கண்டார். சலீம், சமரையும் ஊர் மக்களுள் ஒருவராக நினைத்து அடிக்கப் போகும்போது, திடுமென ஆளடையாளம் கண்டு திடுக்கிட்டான். அடிதடியை நிறுத்தும்படி உத்தரவிட்டு "சேட் அவர்களே! நீங்களுமா இதில் கலக்கிறீர்கள்?” என்றான்.

"நான் மனிதனல்லவா? பணம் என் மனிதத்தன்மையை முன்பு மூடியிருந்தது. ஆனால், குடும்பத் தியாகத்தின் தீ - என் துயர்களின் உள்வெப்பு ஆகிய இரண்டிற்குமிடையில் அம்மூடாக்குக் கலைந்தது. ஆனால் நீ - அமரின் நண்பனாகிய நீ - சீர்திருத்த இளைஞனாகிய நீ - என்ன செயல் செய்கிறாய்?" என்று

சமர் கேட்டார்.

மனமாறிய செல்வரும் மலைப்புற்ற இளமை அதிகாரியும் நட்புறவுடனே வாதாடினர். நீதி ஆராய்ந்தனர். பின் அளவளாவினர். சலோனி வீட்டுக்கு அவனை ட்டுச் சென்று காட்டி, அவள் கோபத்தையும் கண்டித்து, ருவரையும் நட்பாக்கினார். பின் அவர் தம் சாதி சமயக் கண்டிப்பை வெறுத்தவராய், சலீமுடன் உடனிருந்து உண்ணும் அளவுக்குச் சாதி கடந்த மனித அன்பு கொண்டு காசிக்கு மீண்டார்.

சலீம் ஏழையர் வறுமை நிலையை நேரில் கண்டாராய்ந்து அதற்காகத் தான் கோரும் பரிகாரங்களையும் வகுத்தெழுதி அரசியலாருக்கு அனுப்பினான். அதன் பயனாக அவன் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, கோஷ் என்ற ஒருவர் பதவி ஏற்றார். மக்கள் இதற்குள் சலீமிடம் பற்றுதல் கொண்டுவிட்டனர். தம்மை உதவியற்ற நிலையில் விட்டுச் செல்லாது, தம்முடனிருக்க வேண்டினர். அவன் அவர்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தினான். அரசாங்கம் அவனையும் சிறையிட்டு முன்னியைப் போலவே காசிக்குச் சிறை மாற்றியது.